குறிவைத்து காத்திருக்கும் சந்திராஷ்டமம்… இந்த நான்கு ராசிக்காரங்க தவறிக்கூட வெளியே போயிடாதீங்க! இந்த வார முழுபலன்கள்

ஏப்ரல் மாதத்தில் கடைசி வாரமும் மே மாதத்தில் முதல் வாரமும் இணைந்த இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் யாருக்கு செலவு வரும், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களின் கேள்விகளுக்கு இந்த வார ராசி பலன்கள் விடை தருகிறது.

இந்த வாரம் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ரொம்ப கவனமாக இருங்க. எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. வம்பு வழக்கு வரும் வீண் பிரச்சினையில மாட்டிக்காதீங்க.

மேஷம்


இந்த வாரம் உங்க லைப்ல சந்தோஷமும் நிம்மதியும் சேர்ந்த வாரமாக அமைந்துள்ளது. என்னதான் பிரச்சினைகள் வந்து உங்களுக்கு மன உளைச்சலை கொடுத்தாலும் நீங்க அதை ஈஸியா சமாளிப்பீங்க. குடும்பத்தில சின்னச் சின்னதா குழப்பம் வரலாம். அதை பேசியே சமாளிப்பீங்க. நீங்க எதையும் யோசிச்சு பேசுங்க.

உங்களுக்கு வேலையில சில மாற்றங்கள் வரலாம். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். ஆபிஸ்ல வரப்போகிற பிரச்சினைகளை ஈஸியாக சமாளிப்பீங்க. விஐபிக்கள் அறிமுகம் கிடைக்கும். திருமண சுப பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ரொம்ப நல்லபடியாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்


இந்த வாரம் உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை ஈசியாக சமாளிப்பீங்க. வியாபாரத்தில சின்னதாக லாபம் வரலாம். திடீர் வருமானம் வருதேன்னு நினைச்சா கூடவே கடன் பிரச்சினையும் வரும் எனவே பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. பணத்தை எதற்காகவும் பெரிய அளவில முதலீடு பண்ணாதீங்க. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாங்கி வச்ச சரக்கும் உற்பத்தி செய்த பொருட்களும் தேங்கிப்போச்சேன்னு கவலைப்படாதீங்க காலம் வரும் உங்க பொருட்கள் நல்ல லாபத்தில் விலை போகும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

மிதுனம்


இந்த வாரம் உங்களுக்கு விரைய செலவுகள் அதிகம் வரலாம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். இப்போதைக்கு சுப காரிய பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம். ஊரடங்கு இருக்கிற இந்த கால கட்டத்தில நீங்க வீட்டை விட்டு வண்டி வாகனத்தில போகாதீங்க அப்புறம் தேவையில்லாத வம்பு வழக்குகள் வரலாம் கவனமாக இருங்க.

உங்க ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க. வியாபாரத்தில கூட்டாளிகளை அனுசரித்து போங்க. வேலை செய்றவங்க கவனமாக இருங்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. வீட்ல கணவன் மனைவி பிரச்சினை சின்னதாக வரலாம் விட்டுக்கொடுத்து போங்க.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

கடகம்


நீங்க நினைச்சது நடக்கும். மன நிம்மதி பிறக்கும். உங்களுக்கு வியாபாரத்தில இந்த வாரம் லாபம் வரும். நீங்க எடுக்கிற முயற்சி வெற்றிகரமாக நடக்கும். பணவரவு நன்றாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்திலும் வெளியிலும் பேசும் போது கவனமாகவும், நிதானமாகவும் பேசுங்க வீண் பிரச்சினை வராமல் தப்பிக்கலாம்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வீட்ல எல்லோரும் சும்மாவே இருக்காங்க ஆனால் செலவு மட்டும் அதிகமா வருதேன்னு கவலையாக இருக்கும். கவலைப்படாதீங்க உங்களுக்கான வருமானம் நிச்சயம் வரும். இந்த வாரம் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

சிம்மம்


இந்த வாரம் நீங்க உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உற்சாகமாக இருப்பீங்க. உங்க குடும்பத்தில இருக்கிறவங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. வருமானம் வரம் கூடவே செலவும் வருதேன்னு கவலைப்படாதீங்க. நண்பர்கள் மூலம் பணம் வருமானம் வரும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பீங்க. உங்க நிதி நிலைமை ரொம்ப நல்லா இருக்கும்.

வேலையில் உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி நெருக்கம் கூடும். சொந்தக்காரர்கள் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம் கவனம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரலாம். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

கன்னி


உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. சாப்பிடும் போது கவனமாக சாப்பிடுங்க. கண்ட நேரத்திற்கு எதையும் சாப்பிடாதீங்க. வியாபார விசயத்தில பொறுமையாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் அதை சமாளிப்பீங்க. திருமண பேச்சுவார்த்தைகள் நடத்த இது சாதகமான நேரமில்லை.

பணம் கொடுக்கல் வாங்கலில் நீங்க கவனமாக இருங்க. குடும்ப உறுப்பினர்கள் மூலம் உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். இப்போ இருக்கிற சூழ்நிலையில வண்டியில வெளியே போக நினைக்காதீங்க. வண்டி வாகனத்தை வீட்டை விட்டு வெளியவே எடுக்காதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நாள் : புதன்கிழமை

துலாம்


இந்த வாரம் கொஞ்சம் ஊசலாட்டமாகவே இருக்கும். வரவுக்கு மீறி செலவு வருதேன்னு மனசலவில சஞ்சலங்கள் வரலாம். மனசு அமைதியில்லாமல் அலைபாயும். கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும். திருமண வயதில இருக்கும் இளம் தலைமுறையினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை குறைங்க அப்பத்தான் உங்களுக்கு பணம் கையில வரும். பிள்ளைகள் வழியில சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க.

வேலை விசயத்தில் எச்சரிக்கையாக இருங்க மேலதிகாரிகள் மூலம் உங்களுக்கு சிக்கல்கள் வரலாம். நிதி நெருக்கடியை சமாளிக்க சின்னதாக கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம். இந்த வாரம் ஏப்ரல் 27 காலை 11.46 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்


இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப முன்னேற்றமான வாரம். யோகமான வாரமாக இருக்கப் போகுது நல்ல செய்திகள் தேடி வரும் வியாபாரத்தில லாபம் வரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியங்கள் பற்றி பேசுவாங்க நல்லபடியாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். வழக்கு பிரச்சினை தீரும் எதிரிகள் தொல்லைகளும் இருக்காது. உங்க ஆரோக்கியம் இந்த வாரம் நல்லபடியாக இருக்கும்.

எதையும் விட்டுக்கொடுத்து போங்க இந்த வாரம் ரொமான்ஸ் அதிகம் நடக்கலாம். மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. ஏப்ரல் 27ஆம் தேதி காலை 11.46 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 7.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஊரடங்கு உள்ள இந்த கால கட்டத்தில் எப்போதும் வீட்டிற்குள்ளேயே இருங்க எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

தனுசு


இந்த வாரம் நீங்க நிதானமாக இருங்க. உங்க வேலையில வெற்றி கிடைக்கும். நிதி நெருக்கடிகள் தீரும். ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சுப காரியங்கள் பற்றி பேசுவாங்க. வீட்ல சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம். விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் வராது உறவினர்கள் உதவி கிடைக்கும். நீங்க செய்யிற வேலையில உங்களுக்கு இடைஞ்சல் வரலாம்.

பிள்ளைகள் மூலம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க, வேலை செய்யிற இடத்தில சீனியர்ஸ் உதவி கிடைக்கும். வேலை விசயமாக நல்ல செய்திகள் தேடி வரலாம். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி லாபம் வரும். 29 இரவு 07.57 மணி முதல் மே 2ஆம் தேதி அதிகாலை 01.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மகரம்

உடல் உஷ்ணமாக இருக்கும் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. பெர்சனல் வாழ்க்கையில இருந்த பிரச்சினைகள் தீரும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். கடன் பிரச்சினைகள் தீரும். எதிரிகள் நண்பர்களாக மாறுவாங்க. என்னதான் பிரச்சினை இல்லை என்றாலும் உங்க கோபமே உங்களுக்கு எதிரியாக மாற வாய்ப்பு இருக்கு.

உடன் பிறந்தவர்களையும் நெருங்கியவர்களையும் அனுசரித்து போங்க. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி பண்ணுவீங்க. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை நீங்கி நெருக்கம் அதிகமாகும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் சரியாகும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க இப்ப இருக்கிற சூழ்நிலையில நிறைய முதலீடு பண்ணாதீங்க சிக்கலாயிரும். வேலை தேடுறவங்களுக்கு இந்த வாரம் புது வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. மே 02 அதிகாலை 01.05 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க.

அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கும்பம்


இந்த வாரம் உங்களுக்கு யோகமான வாரம். வியாபாரம் விசயமாக நீங்க எடுக்கிற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். என்னதான் வருமானம் வந்தாலும் கையில காசு நிக்காது எல்லாமே விரைய செலவாக மாறி போயிரும்.

கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும். வீட்ல எப்பவுமே கலகலப்பா சந்தோஷமாக இருப்பீங்க. உதவி பண்றது தப்பில்ல அதுக்காக கையில இருக்கிற பணத்தை கொடுத்துட்டு ஏமாந்து போயிறாதீங்க. வேலையில சில நெருக்கடிகள் வரலாம் கவனமாக இருங்க. கடன் பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

மீனம்


இந்த வாரம் உங்களுக்கு பணம் வருமானம் நிறைய வரும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க, ரொம்ப கோபமாக பேசாதீங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில எதையும் தெளிவாக பேசுங்க இல்லாட்டி நீங்க ஒண்ணு பேசப்போய் மத்தவங்க அதை தவறாக புரிஞ்சுப்பாங்க அதுவே சிக்கலாயிரும். வியாபாரத்தில ரொம்ப பொறுமையாக இருங்க.

குடும்பத்தில ஒற்றுமையும் மனதில் நிம்மதியும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். தடைகள் விலகும் கொடுத்த கடன்கள் உங்களுக்கு திரும்ப வரும். சொந்த பந்தங்களோட வீட்ல சேர்ந்து இருக்கீங்க. எதையும் விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை