தலைமுடியிலும் அதிர்ஷ்டமா?… இனி ஸ்டைலுக்கு கூட இப்படி செய்யாதீங்க! வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுமாம்

ஆறு வயது பிள்ளைகள் முதல் 60 வயது முத்த குடிமகள் வரை இன்றைக்கு பலரும் லூஸ் ஹேர் ஸ்டைலுக்கு மாறி விடுகின்றனர். தலைமுடியை பின்னி போட நேரமில்லை ஒரு கிளிப்பை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டால் போதும் வேலை முடிந்து விடும் நினைக்கிறார்கள். நேர் வகிடு எடுத்து தலைசீவி பின்னி பூ வைத்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

பெண்கள் தங்களின் தலைமுடியை மூன்று பிரிவுகளாக பிரித்து பின்னி போடுவார்கள். இதில் நடுவில் இருப்பது பெண் பாகம், வலப்பக்கம் இருக்கும் பிரிவு புகுந்த வீடு, இடது பக்கம் இருக்கும் பிரிவு பிறந்த வீடாகவும் கருதப்படுகிறது. பெண் என்பவர் தான் பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் சரி சமமாக பாவிக்க வேண்டும் என்பதற்காகவே தலைமுடி பின்னல் மூலம் உணர்த்தப்படுகிறதாம்.

  • அதோடு பெண்கள் சமைக்கும் போதும் பூஜை அறை அறையில் விளக்கேற்றும் போதும் முடி உதிரக்கூடாது என்கிறது சாஸ்திரம் எனவேதான் பின்னல் பின்னி போட வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள்.
  • பெண்களின் உடம்பில் இருக்கும் நல்ல சக்தியானது தலைமுடியின் நுனி வழியாக வெளியேறுவதாக சொல்வார்கள் எனவேதான் பெண்கள் நன்றாக நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் அல்லது குஞ்சலம் வைத்து கட்டி அழகுபடுத்தியிருப்பார்கள்.
  • இப்போதே சில பின்னல்கள் போட்டு ஹேர்பேண்ட் போட்டு விடுகிறார்கள் அதுவும் பேசனாகி விட்டது. சிலரோ அப்படியே பின்னாமல் விட்டு காற்றில் அலைபாய விட்டு முடியை கண்ட இடங்களில் உதிர விட்டு விடுகிறார்கள்.
  • பெண்கள் தலையை சீவி பின்னும் போது அழகாக நேர் வகிடு எடுக்க வேண்டும் என்பதுதான் விதி. அதுதான் நம் உடலில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம்.
  • குழந்தை இல்லாத தம்பதியர் மனக்குறையோடு காஞ்சி சங்கராச்சாரியாரை பார்க்க சென்ற போது, அந்த பெண்ணின் தலை வகிட்டை பார்த்து நேர் வகிடு எடுத்து சீவினால் வாழ்க்கை நேராகி விடும்.
  • கோணல் வகிடு எடுத்து சீவினால் வாழ்க்கை கோணலாகத்தான் இருக்கும் என்று சொன்னதாக அவருடன் இருந்தவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
  • நேர் வகிடுக்கு சமஸ்கிருதத்தில் சீமந்தம் என்ற பெயர் உள்ளது. பெண்ணிற்கு சீமந்தம் நடக்க வேண்டும் என்றால் நேர் வகிடு எடுத்து சீவ வேண்டும் என்று காஞ்சி பெரியவர் சொன்னதைக் கேட்டு அந்த பெண் நேர் வகிடு எடுத்து சீவி வர ஓராண்டிற்குள் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றனவாம்.
  • பெண்கள் தலையை நேர் வகிடு எடுத்து இரண்டு சம பாகங்களாக பிரிக்கும் பட்சத்தில் நம்முடைய மூளை சீராக செயல்படும் என்கிறது அறிவியல் உண்மை. அதோடு அதிர்ஷ்டமும் நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
  • நடிகைகள் நடிப்பிற்காக அழகிற்காக தலைவிரி கோலமாக இருந்தால் படிக்கும் பெண்களும், குடும்ப பெண்களும் அதே ஸ்டைலை பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி லூஸ் ஹேர் விட்டால் உங்க வாழ்க்கைதான் லாஸ் ஆகிவிடும் என்கின்றனர் பெரியோர்கள்.