இன்று வைகாசி வெள்ளி‘.. யோகம் வந்துசேர அம்மனை இப்படி வழிபடுங்கள்

இன்று வைகாசி வெள்ளியன்று அம்மனை தரிசித்தால் யோகங்கள் வந்து சேரும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை மகாலக்ஷிக்கு உகந்த நாள், அஷ்ட லக்ஷ்மியரையும் வழிபடவேண்டிய நன்னாள்.

சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்கி அவர்களின் அருளைப் பெறவேண்டிய நாள்.

வைகாசி மாதத்தில், முருகப்பெருமானுக்கு உரிய விசாகம் நட்சத்திர நாள், முக்கியத்துவம் கொண்ட நாளாகப் போற்றப்படுகிறது.

அதேபோல், கந்தனின் அன்னையையும் உலகின் அனைத்து சக்தியரையும் வணங்கி வழிபடவேண்டிய மாதமாகவும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நன்நாளில்..

வீட்டில் விளக்கேற்றுங்கள். ‘அயிகிரி நந்தினி’ பாடுங்கள். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுங்கள். ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலை வாயாரப் பாடுங்கள்.

இவற்றில், குளிர்ந்து போய் உங்கள் இல்லத்துக்கு அடியெடுத்து வைப்பாள் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி!

மேலும், வெள்ளியன்று ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. இந்த நேரத்தில், துர்கை, காளி முதலான உக்கிர தெய்வங்களை விளக்கேற்றி வழிபடுவது, தீயசக்திகளை அழிக்கும். எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்யும்.

இதேபோல், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுங்கள்.வைகாசி சுக்கிரவாரத்தில், சக்தியை வணங்குங்கள்.

செல்வங்கள் வந்துசேர…

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது.

மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like