அதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா?

மேஷம்

இந்த நாள் வெற்றிகரமான நாளாக பிறக்கப் போகின்றது. தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை தொடங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சொந்தத் தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தில் மட்டும் அக்கறை தேவை.

ரிஷபம்

இன்று அதிகப்படியாக பேசாமல் இருப்பது நல்லது. சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும், அனாவசியமாக பேசாதீர்கள். மேலதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் பொறுமையாக பேசுங்கள். பண பரிமாற்றத்தில் கவனமாக இருங்கள்.

மிதுனம்

இன்று அனைவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யப் போகிறீர்கள். ஏனென்றால், இன்று உங்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரிக்கப் போகின்றது. கொஞ்சம் கஷ்டப்படுபவர்களுக்கு சேர்த்து உதவியை செய்து விடுங்கள். எல்லோரிடமும் பாராட்டு கிடைக்கக்கூடிய தினம் இன்றைய தினம்.

கடகம்

இன்று சுறுசுறுப்பாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் தொடங்கும் எந்த காரியமாக இருந்தாலும் அது வெற்றிதான். தைரியமாக வேலையை தொடங்கலாம். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதைப் பற்றியும் கவலை இல்லாமல் நிம்மதியாக இருங்கள். மன உறுதியோடு செயல்பட்டால் நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

இன்றைய தினம் பிரச்சனைகள் சின்ன சின்னதாக வந்து போக வாய்ப்பு உள்ளது. யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உங்களது பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் உஷாராக இருந்தால் பிரச்சனை வராது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி

இன்று உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அநாவசிய பேச்சை தவிர்த்து கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பொறுமை அவசியம் தேவை. பிரச்சனை கைகலப்பு வரை போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று நிம்மதியாக இருக்கப் போகிறீர்கள். கஷ்டமா இருக்கிற வேலையை கூட, ரொம்ப சுலபமா முடிக்க போறீங்க. இதனால் அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கப்போகிறது. எதிர்பாராத சம்பள உயர்வும் கிடைக்கலாம். பதவி உயர்வும் கிடைக்கலாம். அதிக லாபம் உண்டு.

விருச்சிகம்

இன்று தைரியமாக செயல்படப் போகிறீர்கள். எது நடந்தாலும், பார்த்துவிடலாம் என்று சில துணிச்சலான காரியத்திலும் ஈடுபடலாம். அதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. யாரை நம்பியும் உங்கள் கையில் இருக்கும் பொருட்களை ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான பொருட்கள் என்றால் நீங்களே பத்திரமாக வச்சுக்கோங்க.

தனுசு

தம்பதியினருக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளதால், யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து சென்று விட வேண்டும். நீங்கள் எதிர்பாராத தொகை ஒன்று இன்று உங்கள் கைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அவசியம். மறக்க வேண்டாம். பிற்காலத்தில் உதவும். மற்றபடி சந்தோஷமான நாள் தான் இன்று.

மகரம்

இன்று சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களுக்குள் இருக்கும் மனதைரியத்தை மட்டும் அதிகரித்துக் கொண்டால், எல்லாம் வெற்றிதான். சில செயல்பாடுகளை பயந்து விட்டு விடுவதன் மூலம், வெற்றி உங்கள் கைகளிலிருந்து நழுவி செல்கிறது. கொஞ்சம் தைரியத்தோடு செயல்படுங்கள்.

கும்பம்

இன்று உற்சாகத்தோடு செயல்பட போகிறீர்கள். எல்லா பணியையும் விரைவாக முடித்து விட்டு, நல்ல பெயர் வாங்குவீர்கள். உடல் அசதி காணப்படும். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் யாரிடம் உதவி என்று போய்க் கேட்டாலும், இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

மீனம்

இன்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். யாரையும் ஒரேடியாக அனுசரித்து செல்ல வேண்டாம். யாரையும் ஒரேடியாக எதிர்த்துக் கொண்டும் வாழ வேண்டாம். சராசரியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அதுதான் நல்லது. அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டாம்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like