சூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது! வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்…. உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் வரை நீடிக்கலாம் என்று உலகளாவிய ஆய்வு நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்போதய சூழ்நிலையில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் குருவும் சனியும் மகர ராசியில் வக்ரமடைந்துள்ளன.

துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரனும் வக்ரமடைந்துள்ளார். கிரகங்களின் வக்ர சஞ்சாரம் சாதகமில்லாத நிலையிலேயே உள்ளது. மிதுனம் ராசியில் உள்ள ராகு உடன் இப்போது புதன் இணைந்துள்ளார். ஜூன் மாத மத்தியில் சூரியன் இணைந்து சஞ்சரிப்பார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதிக்கு மேல் தனுசு ராசியில் 6 கிரகங்கள் கூட்டணி அமைத்து சஞ்சரித்தன. இந்த கிரகங்களின் மீது ராகுவின் பார்வை விழுந்தது. டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நாவல் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரப்பியது. 62 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது.

ராகு கிரகஸ்த சூரிய கிரகணம்
இப்போது ஜூன் 21ஆம் தேதி மீண்டும் ஒரு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இது மிதுனம் ராசியில் ராகு கிரகத்தினால் சூரிய கிரகணமாகும். மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் இணைந்திருக்கும் நேரத்தில் கேதுவின் பார்வை இந்த கிரகங்களின் மீது விழுகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

மேஷம் ராசியில் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மேஷ ராசியின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. சென்னையின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி. செவ்வாய் பகவான் இப்போது கும்பத்தில் சஞ்சரிக்கிறது. ஜூன் 18ஆம் முதல் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் செவ்வாய். மகரம் ராசியில் இருந்து வக்ர சனியின் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது இது மேலும் பலவீனப்படுத்தும்.

பாதிப்பு நீடிக்கும்
குருவின் வக்ர சஞ்சாரம் படிப்படியாக பின்னோக்கி நகர்ந்து ஜூன் இறுதியில் தனுசு ராசிக்கு மாறுகிறார் குரு பகவான். சனியை விட்டு குரு விலகுவது சற்றே ஆறுதலான விசயம்தான். நோய் தாக்கம் சற்றே குறைந்தாலும் செப்டம்பர் மாதம் வரை நோய் பாதிப்பு நீடிக்கும். கொரோனா வைரஸ் லாக் டவுன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஜூன் 30 வரை நீடிக்கிறது. செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவே ஆய்வுகள் கணித்துள்ளன. செப்டம்பர் 13ஆம் தேதி முதல் குருவின் வக்ர சஞ்சாரம் முடிந்து நேர்கதியில் பயணிக்கத் தொடங்குவார்.

சுக்கிரன் சுகமா இல்லை
கலைகளின் நாயகன் சுக்கிரன் ரிஷபம் ராசியில் வக்ரம் அடைந்து பலவீனமாக இருப்பதால் கலைத்துறையினருக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. சொந்த வீட்டில் வக்ரமாக இருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி முதல் ஓரளவு வலிமை அடைவார். அதுமுதல் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம். நவம்பர் 16 ஆம் தேதி முதல் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்வார். சினிமா, சின்னத்திரைக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் பாதிப்புகள் நீங்கும்.

பள்ளி கல்லூரி திறப்பு
செப்டம்பர் மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழும் போது நோய் தொற்று பாதிப்பு குறையும். செப்டம்பர் 2ஆம் தேதி முதல் புதன் வலிமை அடைவதால் மாணவர்களுக்கு இது நல்ல காலகட்டம். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் வேலையிழப்பு, வருமானமின்மை, பொருளாதார வீழ்ச்சி என பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் அடுத்த ஆண்டு தீரும். இந்தியா சூப்பர் பவர் ஆக வாய்ப்பு உள்ளது. இப்போதய கால கட்டத்தில் குரு, சனி, சுக்கிரன், வக்ரமடைந்திருக்கின்றனர். நவகிரக வழிபாடு, குல தெய்வ வழிபாடு அவசியம்.