14 நாட்கள் தொடர்ந்து ஏலக்காய் தண்ணீர் குடிங்க…. உடம்பில் பல மாற்றங்கள் நிகழுமாம்!

ஏலக்காயில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு. அதானல் தான் கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்க்கின்றது.

இதில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

அதிலும் ஏலக்காயில் நீர் தயாரித்து தினமும் அருந்தி வந்தால் இன்னும் பல உடல் நல பிரச்சினைகளை குறைக்கின்றது என்று கருதப்படுகின்றது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஏலாக்காய் நீரை எப்படி தயாரிப்பது என்பதையும், அதனை குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போம்.

ஏலக்காய் தண்ணீர் தயாரிக்கும் முறை
 • ஏலத்தினைக் கொண்டு நீர் தயாரிக்க முதலில் சிறிதளவு ஐந்து முதல் பத்து வரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு ஏற்ப ஏலக்கய எடுத்துக் கொள்ளுங்கள். அதனை பொடித்து, அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
 • அதிகமாக நைஸ் பவுடராக செய்ய வேண்டாம், இதில் வேண்டுமானால் ஒரு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
 • தண்ணீரை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இல்லையெனில் ஏலக்காயில் உள்ள துவர்ப்பு சுவை அதிகமாக நீரில் இறங்கிவிடும்.
 • பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் பாதியளவு தண்ணீரைக் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம்.
நன்மைகள்

 • ஏலாக்காய் தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குமட்டல், ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை இது தீர்த்திடும். இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
 • நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது இவற்றை நீக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
 • பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண்களை இது போக்கும். அதே போல கெட்ட நாற்றம் வருவதையும் தடுக்கம்.
 • ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
 • ஏலாக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதனால் இளமையுடன் இருக்க இது உதவிடும்.
 • சுற்றுப்புறச் சூழல் காரணமாக அடிக்கடி மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நீரை காய்ச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 • பெண் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை அதே நேரத்தில் பருவமடைந்து உதிரப்போக்கும் ஏற்படுவதினால் ரத்த சோகையினால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஏலக்காய் நீர் குடிப்பதினால் அதன் தீவிர தாக்கத்திலிருந்து மீள முடியும்.
 • உங்களுக்கு இருமல் ஏற்பட்டால் இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்.இருமலை கட்டுப்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தடுக்கும்
நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like