ஒரு சில வீட்டில் பணவரவு இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் செலவாகிவிடுகிறது என நிறைய பேர் வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.
வருமானம் இருந்தாலும் ஒரு வீட்டில் சேமிப்பு என்ற எண்ணம் இருந்தால்தான் பணத்தை சேமிக்க முடியும்.
எப்படி நம் வீட்டு வருமானத்தை இரட்டிப்பு ஆக்கலாம் என்பதற்கான வழிமுறை என்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளி மோதிரம்
- கண்ணாடி பவுல்
- வெற்றிலை- 1
- பச்சை கற்பூரம்- 1 துண்டு
வெள்ளி மோதிரம் யாருடையதாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் சம்பளம் வாங்குபவரின் மோதிரமாக இருக்க வேண்டும்.
கண்ணாடி பவுலில் வெள்ளி மோதிரம் மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அதை மூடும் படி வெற்றிலையை காம்பு நீக்கி வெற்றிலையின் முன் பக்கம் மோதிரம் மற்றும் பச்சை கற்பூரத்தை பார்த்தபடி வைக்க வேண்டும்.
காம்பு நீக்கிய பக்கம் சுவாமிக்கு வலதுபுறமாக இருக்கும்படி வைக்க வேண்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்துவிட்டு மோதிரத்தை இடது கையின் ஆள்காட்டி விரலில் போட்டுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பணம் ஏதாவது ஒரு வகையில் நிலுவையில் இருக்கும்.
இந்த வழிமுறையை வியாழக்கிழமை இரவு சாப்பிடுவதற்கு முன் செய்ய வேண்டும்.
எந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போதும் அதை முழு நம்பிக்கையோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும்.