வீட்டில் செல்வத்தின் அதிபதி குபேரனின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்? இதோ உங்களுக்காக!

குபேரனின் அருள் இருந்தால் தான் வீட்டில் மகாலக்சுமி குடிகொள்வாள் என பெரியோர்கள் சொல்வதுண்டு.

குபேரனின் அருள் பெற நாம்என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மாலை வேளையில் அதவாது மாலை 5 மணி முதல் 7 மணி வரை வீட்டில் குபேர தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.

குபேர தீபம் ஏற்றும் முறை

வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று குபேர தீபம் ஏற்றி வர வேண்டும்.

வியாழக்கிழமை அன்று மாலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து பச்சரிசி மாவால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டையால் அழகுப்படுத்தி, பிறகு வீட்டு நிலை வாசப்படிக்கு இருபுறமும் மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

அதன் பிறகு எலுமிச்சை பழத்தில் அதாவது அந்த பழத்தில் எந்தவித புள்ளிகளோ இருக்க கூடாது. அந்த பழத்தை இரண்டாக நறுக்கு, ஒரு பகுதியில் மஞ்சளும், மற்றொரு பகுதியில் குங்குமமும் மூசி நிலைவாசப்படியின் இருபுறம் வைத்து அதற்கு பூ போட வேண்டும்.

தினமும் எலுமிச்சை பழத்தை மாற்ற வேண்டும். அதேப்போல் பழைய எலுமிச்சை பழத்தை கால் படாத இடத்தில் தூக்கி வீசி விட வேண்டும். அதன் பிறகு குபேர விளக்கை ஒரு தட்டில் வைத்து வீட்டு வாசலில் நின்றபடி இந்த தீபத்தை கிழக்கு நோக்கி எரியும் படி வைக்க வேண்டும்.

இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வது வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், கடன் தொல்லை போன்றவை சரியாகும் என்பதுடன் குபேரனின் அருளும் கிடைக்கும்.