இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் செவ்வாய் பெயர்ச்சி! எந்த ராசிகெல்லாம் பேராபத்து? யார் யார் மிக அவதானதாக இருக்கனும்?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் அவற்றின் நிலையில் மற்றும் வழக்கமான நேரத்தில் சுற்றி வருகின்றன.

இந்த பதிவில், செவ்வாய் கிரகம் ஜூன் 18ம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜூன் 18ம் தேதி இரவு 8.12 மணிக்கு செவ்வாய் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறது.

ஆகஸ்ட் 16 அன்று 08:39 வரை மீனத்தில் இருக்கும். செவ்வாய் பகவானின் குணமாகப் போர் குணம், கோபம் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த கோபம் காரணமாக திருமண வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஒவ்வொரு பெயர்ச்சியையும் போலவே, செவ்வாய் பெயர்ச்சி எப்படிப் பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்..

மேஷம்
மேஷ ராசிக்கு 12 வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில், தேவையற்ற செலவினங்களைத் தவிர்த்து, சமநிலையைப் பராமரிக்கவும். எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் உங்களுக்கு இருக்கும், பொறுமையாக இருங்கள், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். காலப்போக்கில், எல்லா சூழ்நிலைகளும் நல்ல வகையில் மாறும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவார், உங்களுக்கு பலர் உதவ முன்வருவார்.

ரிஷபம்
உங்கள் ராசியின் 11 வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவீர்கள். மேலும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். குடும்ப உறவை மேம்படுத்த செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது, நீங்கள் உங்கள் மனைவியின் மூலம் நன்மை அடைவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரிவினைகள் இருக்கலாம். எந்தவிதமான விவாதத்திலும் சச்சரவில் ஈடுபடாதீர்கள், இல்லையெனில் நீங்கள் அவமானமும், இழப்பும் சந்திக்க வேண்டியது வரும்.

மிதுனம்
உங்கள் ராசியின் 10 வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் முயற்சிகள் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். இராணுவம், காவல்துறை போன்ற பாதுகாப்பு சேவையில் பணியாற்றும் நபர்களுக்கு பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். வணிக ரீதியாக உங்களுக்கு முன்னேற்றமும், மிகவும் லாபகரமானதாக இருக்கும். புதிய வேலை தேடுவோருக்கு அவர்களின் கனவு நிறைவேறும்.

கடகம்
உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில், வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள், தொல்லைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உங்களுக்கு குழந்தை மூலம் மகிழ்ச்சியும், நற்பெயரும் கிடைக்கும். எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவும், இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் வாழ்க்கையில் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள், வேலை தேடுபவர்கள் புதிய வேலையும், பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு பெறலாம்.

சிம்மம்
உங்கள் ராசியிலிருந்து 8வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துங்கள். செவ்வாய் 8ம் இடத்தில் இருக்கக் கூடிய காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும், அது மனதிற்கு வலியை தரலாம். தொழில் ரீதியாக, நீங்கள் லாபத்திற்காக சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், செலவுகளை கவனமுடன் செய்வதால் பொருளாதார சமநிலையை பேண முடியும்.

கன்னி
உங்கள் ராசியிலிருந்து 7வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில், உறவில் நிறைய ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம், அதே போல் குடும்பத்திலும் பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும், கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

பெயர்ச்சி காலத்தில் சகோதர சகோதரிகளுக்கு நல்ல பலன்களைத் தரும், மேலும் உங்கள் வருமானமும் அதிகரிக்கும், இருப்பினும் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள்.

துலாம்
உங்கள் ராசியிலிருந்து 6வது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். . இந்த நேரத்தில் நீங்கள் நல்ல பல பலன்களைப் பெறுவீர்கள், இருப்பினும் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்கள் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பெயர்ச்சி காலத்தில் உயர் நிர்வாகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மற்றவர்கள் விரும்பாத சில முடிவுகளை நீங்கள் எடுக்க நேரிடும், ஆனால் அது அவர்களின் நன்மைக்காக இருக்கும்.

விருச்சிகம்
உங்கள் ராசி பாகவான் செவ்வாய் ராசியிலிருந்து 5வது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். இருப்பினும் நீங்கள் நல்ல ஆலோசனைகளைப் பெறுவீர்கள், மேலும் அதை செயல்படுத்த வாய்ப்புக்கள் பெறுவீர்கள்.

இந்த நேரத்தில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது வரும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும் நன்மை வண்டு சேரும். வேலை செய்பவர்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, எல்லாம் சரியாக நடக்கும்.

தனுசு
உங்கள் இராசி அடையாளத்தின் நான்காவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய சொத்தை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த காலத்தில் உங்கள் வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நீங்கள் கூட்டு தொழில், வியாபாரம் செய்தால், சில கருத்து வேறுபாடுகள் எழக்கூடும்.

மகரம்
உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலத்தில் உங்கள் வலிமை, உங்கள் ஆளுமை அதிகரிக்கும். மேலும், இந்த நேரம் சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் மிகவும் துணிச்சலான சில ஆபத்தான பணிகளை கையில் எடுப்பீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த செயல்களை நீங்கள் முடிப்பீர்கள்.

கும்பம்
உங்கள் ராசிக்கு செவ்வாய் இரண்டாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலத்தில், நீங்கள் திடீர் பணம் செய்ய வேண்டி வரலாம். உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். இந்த காலத்தில் நீங்கள் உங்கள் முயற்சியால் நீங்கள் பெறும் வெற்றி, உங்களின் பதவி உயர்வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.

இருப்பினும், உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பெயர்ச்சி கால கட்டத்தில் உங்கள் சொற்களை கவனமாக பயன்படுத்துவது அவசியம், இல்லையெனில் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

மீனம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. இந்த காலத்தில் நீங்கள் மனதளவில் பலவீனமாக உணரலாம். குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். பல சமயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.