அனைவர்க்கும் தங்கள் வாழ்க்கையில் பணம், வேலை, முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமும் முக்கியம்.
நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள்.
அந்த பொருட்களை முடிந்தளவு வீட்டில் இருந்து தூக்கி எரிந்து விடுவது நல்லது.
இந்த பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் எந்தெந்த பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
பழைய கேக் கலவை
கடைகளில் விற்கும் கேக் கலவைகள் சில சந்தர்பங்களில் உங்களுக்கு ஆபத்தானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதன் மேற்பரப்பானது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
இது அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது காலாவதி தேதியை கடந்து விட்டால் உடனடியாக தூக்கி எறிந்து விடுவது நல்லது.
காய்ந்த மலர்கள்
உங்கள் வீட்டில் காய்ந்த மலர்கள் இருப்பது உங்களுக்கு ஆபத்தானதாகும். முதலில் காய்ந்த மலர்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாகும், அடுத்து அவரை வைத்திருக்கும் பொருட்கள் ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் காய்ந்த மலர்களை கண்டிப்பாக வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவை செல்லப்பிராணிகளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
காலாவதியான மேக்கப் சாதனங்கள்
ஆம் அழகுசாதன பொருட்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இவை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தப்படாமல் போனால் இவை சருமத்தில் அலர்ஜி, வெடிப்புகள், கண்பார்வையில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அழகுசாதனப் பொருட்கள் மூலம் பாக்டீரியாக்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
பழைய மசாலாக்கள்
மசாலா பொருட்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல. இறக்குமதி செய்யப்பட்ட மசாலா பொருட்களில் இருமடங்கு சால்மோனெல்லா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
மல்லி, துளசி, எள், மிளகு போன்றவற்றில் எளிதில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும். எனவே முடிந்தளவு இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தாதீர்கள்.
ஏர் ஃப்ரெஷனர்கள்
உங்கள் வீடு மற்றும் கார்களை வாசனையாக வைத்திருக்கும் ஏர் ஃப்ரெஷனர்கள் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால் இவற்றில் பாதாலேட் எனும் நச்சுப்பொருள் உள்ளது.
இதனை பற்றி எந்த ஏர் ஃப்ரெஷனரிலும் குறிப்பிடப்பட்டிருக்காது. ஆய்வுகளின் படி இந்த நச்சுப்பொருட்கள் எளிதில் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும், குறிப்பாக குழந்தைகளிடம் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
பழைய உள்ளாடைகள்
உள்ளாடைகளின் நெகிழ்வுத்தன்மை காலப்போக்கில் மாறிவிடும். இதனை நீண்டகாலம் உபயோகிப்பது மிகவும் தவறான செயலாகும்.
தேய்ந்துபோன, நெகிழ்வுத்தன்மை இல்லாத உள்ளாடைகள் மூலம் உங்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்காது. ஒரு உள்ளாடையை எட்டு மாதம்தான் உபயோகிக்க வேண்டும். உள்ளாடையின் நெகிழ்வுத்தன்மை சிதைந்து பொருந்தா விட்டால் அதனை உடனடியாக மாற்றவேண்டும்.