ஆற்று மணலில் இருந்து வெளிவரும் பழமையான சிவாலயம்! கடும் ஆச்சரியத்தில் மக்கள்

ஆந்திர மாநிலம் பெண்ணா நதியில் புதைந்திருந்த பழமையான சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரமாலபாடு கிராமத்தில் பெண்ணா நதியில் சிலர் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மணலுக்குள் பழமையான சிவாலயம் புதைந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்தில் தொல்பொருள் துறையினர் பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்தனர்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்த சிவாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.