பேரழிவு நிச்சயம்… சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? கிரகணத்திற்கு பிறகு இந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம்?

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜூன் 21 ஆம் தேதியானது ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது மற்றும் குறுகிய இரவு பொழுதைக் கொண்டிருக்கும்.

ஜூன் 21 ஆம் தேதி சூரிய கிரகணமானது இந்தியாவில் காலை 9.15 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 3.04 மணிக்கு முடிவடையும். கிரகணத்தின் போது, சூரியனானது வானில் நெருப்பு வளையம் போல தெரியும்.

மற்ற கிரகணங்களைப் போலவே, இதுவும் ஒவ்வொரு ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது நாம் நாளை நடைபெறவிருக்கும் சூரிய கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த காலத்தில் நீங்கள் எதிர்மறை செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. குறிப்பாக யாருடனும் சண்டைகள் அல்லது வாதங்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஒரு நல்ல செய்தி வரக்கூடும். இது உங்களுக்கு நேர்மறை மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள். குறிப்பாக உடல் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் இல்லாதவர்களுக்கு உதவுவது அல்லது இந்நாளில் அவர்களுக்கு தண்ணீர் வழங்குவது உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நீங்கள் நாட்களாக முடிவு எதிர்பார்த்த விஷயத்தில் இருந்து ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். நம்பிக்கையை கைவிடாதீர்கள், கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால், அவ்வளவு பெரிய மாற்றம் எதுவும் தெரியாது. நீங்கள் விரும்பிய இடத்தை அடையும் வரை, இன்னும் சில காலம் நீங்கள் போராடவேண்டியிருக்கும். முடிவுகள் தாமதமாக வரக்கூடும். ஆனால் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணத்திற்கு பின் நல்ல செய்தி வரப் போகிறது. இந்த சூரிய கிரகணத்தால் வாழ்வில் சந்தோஷத்தை மட்டுமே காணப் போகிறீர்கள். அலுவலகத்தில் உயர் பதவி அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்திற்கு பிறகு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம். தொற்றுநோய் காரணமாக இந்நேரத்தில் பயணிக்க முடியாமல் போகலாம். ஆனால் இனி அதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். ஏன் வெளிநாட்டில் வேலை செய்ய கூட வாய்ப்பு பெறலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் ஏதேனும் புதிய புராஜெக்ட்டில் வேலை செய்கிறீர்கள் என்றால், அதில் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறனில் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது எவ்வாறு நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். இது உங்கள் வேலைக்கு உதவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது. உங்களைத் தேடி நல்ல செய்திகள் வரக்கூடும். நீங்கள் புதிய வீட்டை வாங்க அல்லது நீண்ட காலமாக இடமாற்றம் செய்ய திட்டமிட்டால், இனிமேல் வெற்றிகரமாக அதைச் செய்ய முடியும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்து வேலை செய்பவராக இருந்தால், அதிலிருந்து வெளியே வர சிறந்த நேரம் இது. உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள். தியானம் செய்ய முயற்சியுங்கள். இந்த சூரிய கிரகணத்திற்கு பிறகு, புதிய வாய்ப்புக்கள் வரக்கூடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் ஏற்கனவே உடற்பயிற்சி செய்யாமல் அல்லது சுத்தமான காற்றை சுவாசிக்காமல் இருந்தால், உடனே அதை செய்யுங்கள். உங்களைச் சுற்றி நேர்மறை விஷயத்தை வைத்திருங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, நீங்கள் விரும்பிய படி எந்த விஷயங்களும் நடக்காது. ஆனால் அவசரப்பட்டு எதிலும் முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு எல்லாவற்றையும் தாமதப்படுத்தலாம். எனவே நீங்கள் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நற்செய்தி தேடி வரப்போகிறது. ஏதேனும் நடக்கும் என்று நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால், அது விரைவில் தற்போது நடக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.