சூரிய கிரகணத்தால் உங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம்… சிம்ம ராசிக்காரர்களே! முக்கியமா நீங்க படிங்க

சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து ஒரே நேர் கோட்டில் விழும்போது நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். இதன் மூலம் சந்திரன் அதன் நிழலை சூரியனுக்கு மேல் செலுத்துகிறது.

கிரகணத்திற்கான சமஸ்கிருத சொல் “சூர்ய கிரஹான்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வானியல் நிகழ்வை மட்டும் குறிப்பதல்ல. வானியல் மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றையும் இது குறிக்கிறது. இது மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்றும், ஜோதிடத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

உங்கள் துணையுடனான உங்கள் உறவை குறித்து அக்கறை கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் ராசியின் படி, இந்த சூரிய கிரகணம் உங்கள் காதல் வாழ்க்கையை எந்த வகையில் பாதிக்கும் என்பதை இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை. ஏனென்றால், இந்த சூரிய கிரகணம், உங்களுக்கு ஆச்சரியத்தை வாரி வழங்க போகிறது. எனவே, உங்கள் துணையிடமிருந்து ஒரு இன்பஅதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை பெற தயாராக இருங்கள். இது உணர்ச்சிபூர்வமான ஒன்றாகவோ அல்லது பொருள் பரிசு பொருளாகவோ இருக்கலாம். எனவே, உச்சக்கட்ட சந்தோஷத்தை பெற தயாராக இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஓய்வெடுப்பதற்கான நாள். உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து எதிர்பார்ப்புகளை முதலில் நிறுத்துங்கள். உங்கள் உறவு தானாகவே சிறப்பாக செயல்படுவதோடு,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும். மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்
காதலில் உங்கள் நகர்வை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களது துணை முதலில் சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பை முதலில் தூக்கி எறியுங்கள். உரையாடலை முதலில் நீங்களே தொடங்குங்கள். இனிமேலும் காத்திருக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்களை பிரிந்து சென்றவர்கள் திரும்பி மீண்டும் உங்களிடமே வந்துவிட வேண்டுமென்று விரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை சற்று அடக்கி, எதார்த்தத்தை புரிந்து செயல்பட முயலுங்கள். தீர யோசித்து முடிவெடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் நீங்களாகவே இருங்கள். சரியான நேரத்திற்காக காத்திருப்பதை முதலில் நிறுத்துங்கள். மாறாக உங்கள் மனதிற்கு பிடித்த நபரிடம் சென்று நீங்களே சென்று உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

கன்னி
உங்கள் காதலரை உங்கள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவற்கான சிறந்த நேரம் வந்துவிட்டது. நல்ல நேரம் வர வேண்டுமென்று காத்திருந்தவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம். இதை தவறவிட்டு விடாதீர்கள். இதுவே சரியான தருணம்.

துலாம்
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் சுமூகமான சூழல் நிலவவில்லையா? அப்படியெனில், துலாம் ராசிக்காரர்களே இதுவே சரியான நேரம்.சண்டைகளைத் தீர்ப்பதற்கும், உங்கள் துணையுடன் தொடர்புகொள்வதற்கும் இதுவே சிறந்த நேரம். எதுவாக இருந்தாலும் அதனை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களை விட்டு பிரிந்த உங்களது பழைய காதலன் திரும்பி உங்களிடமே வந்துவிட விரும்பலாம். அவற்றை புறக்கணிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஓட்டத்தில் அப்படியே செல்ல முயற்சிக்கவும். யாருக்கு தெரியும் அதுவே கூடு சிறந்ததாக அடைந்திடலாம்.

தனுசு
இந்த சூரிய கிரகணத்தின் போது, உங்களால் முடிந்தவரை உங்கள் துணையுடன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுங்கள். ஏனென்றால், உங்கள் எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்கான சிறந்த நேரம் இது தான்.

மகரம்
காதலுக்கு முன்பு ஈகோ இருக்கவே கூடாது. ஒருவேளை, உங்கள் துணையிடமே நீங்கள் ஈகோ பார்ப்பவர் என்றால், உங்களது சுபாவத்தை பற்றி சற்று யோசித்து பாருங்கள். உங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்து பார்ப்பது சிறந்தது. உங்களது துணையுடன் இணையாக நில்லுங்கள். சிறந்த விஷயங்களை பாராட்ட மறவாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் அன்பை அவர்களிடம் உடனே வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த தருணத்தை தவற விட வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களே, இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகுந்த ரொமான்டிக் நிறைந்ததாக மாறப்போகிறது. உங்கள் வாழ்க்கை துணை உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்க போகிறார். அதுமட்டுமில்லாமல், நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவராகவும், அன்பிற்குரியவராகவும் உணர செய்ய தயாராக உள்ளார்.