லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்னென்ன அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்?..

லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அளிக்கும்?

நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

இயற்கைக்கு மீறிய வருமானம், பதவி என்று எதைத் தந்தாலும் அதையெல்லாம் இழக்க நேரிடும்.

எல்லோரையுமே கேள்விக்கு உட்படுத்துவார்கள். எத்தனை பெரிய மனிதராயினும் அவர்களின் பதவிகளைக் கொண்டு பார்க்காமல் கறாராக ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்.

மனிதநேயத்தை பாதிக்கும் பக்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். மாநில அளவில் முதலில் வந்திருப்பார்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?

பச்சோந்தியை கனவில் கண்டால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

என் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

மல்லிகை பூவை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

பிரதோஷ நாளில் மற்றும் பிரதோஷ நேரத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா?

பிரதோஷ நாளில் மற்றும் பிரதோஷ நேரத்தில் பெண் குழந்தை பிறக்கலாம்.

நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

நல்ல பாம்பை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

பணத்தை கீழே இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

வளையலை கனவில் கண்டால் என்ன பலன்?

வளையலை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like