ஒட்டுமொத்த கிரகங்களையும் அடக்கிய ராகு – கேது? இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் பேராபத்து! சிம்ம ராசியின் வாயை குறி வைக்கும் சனி?

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில் சில பகுதிகளில் முழு முடக்கம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் தளர்வுகள் இருந்தாலும் வெளியே வண்டி வாகனங்களில் நடமாட தடை நீடிக்கத்தான் செய்கிறது. ஜூன் மாதத்தின் கடைசி வாரத்திற்கு வந்து விட்டோம். இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மிதுனம் ராசியில் சூரியன் புதன், ராகு உடன் சஞ்சரிக்கிறார்.

ரிஷபம் ராசியில் சுக்கிரன், தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் குரு, சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரமும் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. அந்த வகையில் ஜூலை 02ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

இந்த வாரம் ரொம்ப நன்மையான வாரம். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. குரு ஒன்பதாம் வீட்டிற்கு வந்து கேது உடன் இணைந்திருக்கிறார். நினைத்தது நிறைவேறும். இழந்த கவுரவம் மீண்டு வரும் விஐபிக்கள் சந்திப்பு நடக்கும். குரு நீச்ச நிலையில் இருந்து மாறி ஆட்சி வீட்டுக்கு வருவது சிறப்பு.

குரு உங்க ராசியை பார்க்கிறார். சுப நிகழ்ச்சி நடக்கப் போகுது. சகோதரர் சகோதரிகளிடையே இருந்த பிரச்சினை தீரும். நிண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். ராசி நாதன் 12 ஆம் வீட்ல இருப்பதால் கவனமாக இருங்க. இல்லத்தரசிகளுக்கு ரொம்ப நல்ல வாரம். தடைபட்ட சுபகாரியம் நிறைவேறும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பொருட்கள் விற்று தீரும் லாபம் வரும். அப்பாவிடம் இருந்த மனக்கசப்புகள் மாறும் நீண்ட நாட்கள் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகுது. புதிய வேலை கிடைக்கும். கல்யாண யோகம் கை கூடி வரப்போகுது.

சுப காரியத்திற்கு தயாராகுங்கள். மாணவர்கள் கிடைக்கிற ஓய்வு நேரத்தில நல்ல விசயங்களை நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். ஜூலை 1ஆம் தேதி காலை 08.56 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. எந்த காரணத்திற்காகவும் சந்திராஷ்டம நாட்களில் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரங்களே உங்களுக்கு இந்த வாரம் சாதகமான சம்பவங்கள் அதிகம் நடக்கும். நண்பர்கள், வாழ்க்கைத்துணைவரால் நிறைய நன்மை நடக்கும். எட்டுக்கு உடைய குரு மீண்டும் எட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. விபரீத ராஜயோகம்.

சொந்த பந்தங்களால் நிறைய நல்லது நடக்கும். திடீர் பண வரவு அதிகமாகும். உங்க தொழில் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும் கூட்டுத்தொழில் நன்மையில் முடியும். பணப்பிரச்சினைகள் நீங்கும்.

பொருளாதார ரீதியாக முன்னேறுவீர்கள். மகிழ்ச்சிகள் அதிகமாகும் பிரச்சினைகள் தீரும். வார இறுதிக்குள் நல்ல தகவல் தேடி வரும் இந்த வாரம் உங்க உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு உயரதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சரக்குகள் விற்று தீரும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபடுங்க.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் குரு பார்வை மீண்டும் உங்களுக்கு கிடைக்கிறது. சில மாதங்களாக இருந்த சிக்கல்கள் தீரும். அஷ்டம சனி பாதிப்பு இருந்தாலும் குருவின் பார்வை சந்தோஷத்தை கொடுக்கும். எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் தீரும் வெற்றிகள் தேடி வரும். நண்பர்களால் இருந்த பிரச்சினைகள் தீரும் பேச்சில் கவனமாக இருங்க. ஒருதடவைக்கு இரண்டு தடவை பேசும் விசயங்களை யோசித்து பேசுங்க. எதையும் அவசரப்பட்டு செய்து விட்டு அப்புறம் கஷ்டப்பட வேண்டாம்.

திடீர் செலவுகள் வரும் சுப செலவுகள் வரும் இல்லத்தரசிகளுக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். வேலைக்கு செல்பவர்களுக்கு ரொம்ப நல்ல வாரம். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கல்யாணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் தேடி வரும்.

லாக் டவுன் காலமாக இருப்பதாக கவனமாக இருக்கவும் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே போகாதீங்க. குருவின் பார்வை கிடைப்பதால் சுப காரியங்கள் நிறைய நல்லது நடக்கும் வாரம். மனக்குழப்பம் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழில் வளம் பெருகும். எந்த புது முயற்சி செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுங்க.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருந்தாலும் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்னால் நன்றாக ஆலோசனை செய்து முடிவெடுங்க. பிசினஸ்ல முதலீடு செய்வதற்கு முன்னாடி கவனமாக இருங்க. சனியின் நேரடி பார்வையில் சிக்கியிருக்கிறீர்கள்.

இந்த வாரம் சுப காரிய முயற்சிகள் சரிப்பட்டு வராது. விரைய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு வேண்டவே வேண்டாம். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. எந்த காரியம் செய்வது என்றாலும் ஆலோசனை அவசியம். பிசினசில் முதலீடு செய்யும் முன்பு விழிப்புணர்வு தேவை.

திடீர் சிக்கல்கள் வரலாம். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக் கொடுத்து போங்க. சண்டையை தவிர்க்கலாம். உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்க கவனமாக பண்ணுங்க யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்காதீங்க. பெண்களுக்கு வேலையில் பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். திருமணம் சுப காரிய முயற்சிகள் எதையும் செய்யதீங்க. காலம் வரும் வரை காத்திருங்க.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க துணிச்சல் அதிகமாகும். உங்களின் தன்னம்பிக்கை நிறைய நல்லதை கொடுக்கும். தடைகள் உடைபடும். நல்லது நிறைய நடக்கும் பணவருமானம் வரும், கடன் பிரச்சினை தீரும். தங்க நகையை மீட்பீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும் வாரமாக அமையப்போகிறது.

உங்க முயற்சிகள் எல்லாம் வெற்றியாக முடியும். புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க நல்லது நடக்கும். சமூகத்தில் கவுரவம் உயரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி பேச்சில் நிதானம் தேவை. எட்டில் செவ்வாய் இருப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க.

குருவின் பார்வை கிடைப்பதால் சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். நல்ல வேலை கிடைக்கும். வருமானம் உயரும். புதிய தொழில் அமையும். கஷ்டங்களும் கவலைகளும் தீரும் காலம் வரப்போகிறது. உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். துணிச்சலாக எதையும் செய்யலாம். நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரமாக அமையப்போகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு ஏதோ இனம் புரியாத பயம் மனதை அழுத்திக்கொண்டிருக்கிறது. கவலைப்படாதீங்க உங்க பயம் தீரும் காலம் வரப்போகிறது. செவ்வாய் பகவான் பார்வை நன்மையை கொடுத்தாலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க.

நீண்ட காலமாக நினைத்த காரியம் கைகூடி வரப்போகிறது. வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். சுபிட்சமான காரியங்கள் நடக்கும் என்றாலும் தடைகளோடு நடைபெறும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் புதியதாக பல விசயங்களை கற்றுக்கொள்ளுங்கள். திருமணம் சுப காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.

திடீர் திருமண யோகம் வரும். உறவினர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். லாக் டவுன் காலமாக இருந்தாலும் வேலைவாய்ப்புகள் தேடி வரும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்னு பாடப்போறீங்க. சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். புதிய விசயங்களை உற்சாகமாக தொடங்குவீர்கள். சிலர் புதிய தொழில்களை தொடங்குவீர்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க. வருமானம் தேடி வரும். வரவு அதிகம் வந்தாலும் செலவும் தேடி வரும். உங்க தசாபுத்தி நன்றாக இருந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். எதையும் துணிந்து செய்வீர்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு நல்ல தகவல்கள் வரும். வேலை விசயமாக எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்கும். வெற்றியும் சந்தோஷமும் வரும். நண்பர்களால் சிலருக்கு சிக்கல்கள் வரலாம் கவனமாக இருங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் விழிப்புணர்வோடு எதையும் செய்யுங்கள். இளைய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள். மனரீதியவும் உடல் ரீதியாகவும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நிறைய நல்லது நடக்கும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருவது சிறப்பு. குடும்பம் ரொம்ப குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உறவினர்களிடம் பேசும் போது முன்னெச்சரிக்கையாக இருங்க. வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குழந்தைகளுக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது சுபமான வாரம்.

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். குழந்தைக்காக தவம் இருக்கும் சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பயணங்களை தவிர்த்து விடுங்கள் ரொம்ப நல்லது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். மூத்த சகோதரர்களால் நல்லது நடக்கும். நண்பர்களால் நல்லது தேடி வரும். லாக்டவுன் காலத்திலும் நிறைய நன்மைகளை அனுபவிக்கலாம்.

சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரிகளுக்கு சரக்குகள் விற்று தீரும். சிலர் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். நினைத்ததை சாதிப்பீங்க. உங்க ராசிநாதன் உங்க ராசிக்கு வந்து அமர்கிறார். பயம் கவலை விலகும். இத்தனை நாட்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்த நீங்கள் இனி லாபத்தை ருசிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும்.

பல பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும். சிலருக்கு விஐபிக்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி வாகனங்களில் போகும் போங்கள். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும்.

கல்யாணத்திற்காக காத்திருப்பவர்கள் அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குங்கள். மாணவ மாணவிகள் எதிர்காலம் பற்றி பேசுவீர்கள். சிலருக்கு புதிய வேலைகள் தேடி வரும். வருமானம் உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிகள் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களே, உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதர வகையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். எதையும் கவனமாக கையாளுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதிங்க.கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும். சிலருக்கு சுப செலவுகள் வரலாம். உங்க உடல் மீது அக்கறை காட்டுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் மருத்துவ ஆலோசனை அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். இந்த வாரம் நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் வேலைக்கு முயற்சி பண்ணுங்க. வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பிங்க நல்லதே நடக்கும் கல்யாண யோகம் வந்து விட்டது. வீடு களைகட்டப்போகுது.

ஜூன் 27ஆம் தேதி மாலை 3.50 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.அநாவசியமாக வெளியே சுற்றி வாகனத்தை பறி கொடுத்து விட வேண்டாம். உணவு விசயத்திலும் கவனமாக இருங்க.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே, ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் தேவை. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வருமானம் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

எந்த காரியமாக இருந்தாலும் தடைகள் வந்து பின்னர் சுபமாக முடியும். இந்த வாரம் உங்களுக்கு ஜூன் 27 பிற்பகல் 3.50 முதல் 29ஆம் தேதி மாலை 6.26 வரை சந்திராஷ்டம் இருப்பதால் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. சிக்கல்கள் இருந்தாலும் காரியங்கள் எளிதாக முடியும். பணத்தைப் பற்றிய கவலைகள் தேவையில்லை. பணம் தேடி வரப்போகிறது.

இவ்வளவு காலம் இருந்த செலவுகள் நீங்கும் வருமானம் கூடி வரும். இல்லத்தரசிகள் பேச்சில் கவனமாக இருங்க இல்லாட்டி வீண் பழியில் சிக்கிக்கொள்வீர்கள் எச்சரிக்கையோடு பேசுங்கள். குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாதீர்கள். அடுத்தவர்கள் ரகசியங்களை நீங்க பேசாமல் இருப்பது அதைவிட ரொம்ப நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நன்மையான வாரமாக இருக்கப் போகிறது. சில சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.சிலருக்கு இடமாற்றம் வரலாம்.

குருவின் பார்வை சாதகமான வீடுகளில் விழப்போகிறது. சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும். மனதாலும் உடலாலும் உற்சாகத்தை அனுபவிப்பீர்கள். புதிய விசயங்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். நிறைய பண வருமானங்கள் தேடி வரப்போகிறது.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, நீங்க ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பீங்க. தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கப் போகிறது. சிலருக்கு புதிய வேலைகள் தேடி வரும். மனக்குழப்பங்கள் நீங்கும். ஜூன் 29ஆம் தேதி மாலை 6.26 மணி முதல் ஜூலை 1 ஆம் தேதி இரவு 8.56 மணி வரைக்கும் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. இந்த கால கட்டத்தில் எந்த புதிய முயற்சியும் வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.

உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்கள், சொந்த பந்தங்களின் கவனிப்பு தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். குரு உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார். உங்க சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். மகிழ்ச்சி தேடி வரும்.

கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். தன்னம்பிக்கை தைரியம் தேடி வரும். கடன் பிரச்சினை தீரும் வியாபாரிகள் கடைகளை விரிவுபடுத்துவீர்கள். வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதாலும் உடலாலும் உற்சாகமாக உணர்வீர்கள். கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றி நிறைய யோசித்து முடிவெடுங்க. படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். புதிய வேலைகள் தேடி வரும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like