அழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்? தனுசு ராசிக்கு திரும்பிய குரு? யாருக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் தெரியுமா?

உலக ஜீவ ராசிகளுக்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடியவர் குரு பகவான். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட துன்பங்களிலிருந்து ஆறுதல் தர உள்ளார்.

மகர ராசியில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான், தற்போது தனுசு ராசிக்கு திரும்புகிறார். இதனால் கொரோனா குறைந்து, நாட்டில் செழிப்பு அதிகரிக்கும் என ஜோதிடர்கள், ஆன்மிகவாதிகளும் தெரிவிக்கின்றனர்.

உலக ஜீவ ராசிகளுக்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடியவர் குரு பகவான். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட துன்பங்களிலிருந்து ஆறுதல் தர உள்ளார்.

மகர ராசியில் அதிசாரமாகச் சென்ற குரு பகவான், தற்போது தனுசு ராசிக்கு திரும்புகிறார். இதனால் கொரோனா குறைந்து, நாட்டில் செழிப்பு அதிகரிக்கும் என ஜோதிடர்கள், ஆன்மிகவாதிகளும் தெரிவிக்கின்றனர்.

தனுசு ராசிக்கு திரும்பிய குரு

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் கடந்த ஆண்டு அதாவது 2019 அக்டோபர் 23ம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

இவர் நவம்பர் 5ம் தேதி வரை தனுசு ராசியில் குரு பகவான் அமர்ந்து அனைத்து ராசிக்கும் பலன் அளிக்க வேண்டிய நிலையில், கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அதிசார நிலை அடைந்து அதாவது தன் இயல்பான வேகத்தை விட கூடுதல் வேகத்தில் சென்று, தனுசு ராசிக்கு அடுத்து உள்ள மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும். குரு பகவான் 25 நாட்கள் தான் அதிசார பெயர்ச்சியாக தனக்கு முன் உள்ள ராசிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கிட்டத்தட்ட 105 நாட்கள் அதிசார நிலையில் இருந்துள்ளார்.

தனுசு ராசிக்கு திரும்பிய குருவினால் கிடைக்கும் பலன்கள்
  • குருவின் அதிசாரத்தால் நாட்டில் பல சோதனைகள் ஏற்பட்டன. அதாவது கொரோனா நோய் தொற்று, உயிரிழப்புகள், சீனாவுடனான போர் பதற்றம், பொருளாதார வீழ்ச்சி என பல மோசமான நிகழ்வுகள் நடந்து மக்கள் மனதில் மன அமைதி இல்லாத நிலை ஏற்பட்டது.
  • குருவின் நற்பலன் கிடைக்காத நிலையில், சூரியனும் ராகு கேதுவின் பிடியில் கடந்த 7 மாதமாகச் சிக்கியுள்ளார்.
  • இதன் காரணமாகவும் உலகில் பல பிரச்சினைகள் ஏற்படுவதோடு, போர் அபாயமும் ஏற்பட்டது.
  • தற்போது மீண்டும் தனுசு ராசிக்கு குரு திரும்பியுள்ளதால் நாட்டிற்கும், வீட்டிற்கும் பல நன்மைகள் நடக்கும். அதாவது பண வரவு கூடுதல், திருமண சுப காரியங்கள் நடத்தல், சொத்துக்கள் சேருதல் என நற்பலன்கள் கிடைக்கும்.
  • குருவின் சுப பார்வையாலும், சூரியன் ஜூலை 16ம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி (ஆடி மாதம் தொடங்குதல்) ஆவதாலும் நன்மை கிடைக்க உள்ளது.
  • இப்படி சுப கிரக நிலைகளின் காரணமாக தென்மேற்கு பருவ மழை சிறப்பாக கிடைத்து, விவசாயம் செழிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனாவின் பாதிப்பு குறைய வாய்ப்பு என பல நன்மைகள் ஏற்படக்கூடும் என ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like