பல்லி எழுப்பும் சத்தத்தை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே!… அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆபத்தும் வருமாம்…

வீட்டில் பல்லிகள் இருக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.பல்லிகளை வீட்டில் இருந்து விரட்டி விடாதீர்கள்

வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் நல்லது. பல்லி வீட்டில் இருந்தால் நமக்கு வர இருக்கக்கூடிய கஷ்ட, நஷ்டங்களை முன்பே யூகித்துக் கொள்ளலாம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. பல்லி எழுப்பும் சத்தத்தின் திசைக்கேற்ப பலன்கள் மாறும்.

  • தெற்கு பகுதியில் இருந்து பல்லி சத்தமிட்டால் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போகிறது, சுபநிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
  • தென் மேற்கு திசை – உறவினர்களால் நன்மை ஏற்படும் என்று பொருள்.
  • வடக்கு திசை – சுப செய்தி வரும் அல்லது சுப நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது என்று அர்த்தம்.
தீய பலன்கள் :
  • தென்கிழக்கு – நம் செவிகளுக்கு துக்க செய்தி வரும். உறவினர்களால் கலகம் ஏற்படும்.
  • கிழக்கு – குடும்பத்தலைவி அல்லது தலைவனுக்கு ஏதோ ஒரு விஷயத்திற்காக மனதில் பயம் ஏற்படும் என்று பொருள்.
  • தெற்கு மற்றும் வடக்கு – இந்த 2 திசைகளிலும் பல்லி தொடர்ந்து சத்தமிட்டால் தொழில் நஷ்டம், விரயம், ஆண்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று பொருள்.

இந்த பலன்கள் பல்லி சத்தமிட்ட 10 நாட்களுக்குள் கண்டிப்பாக நடக்கும் என்று பஞ்சாங்க குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.