பித்தப்பையில கல் இருந்தா இந்த 5 வகை உணவுகளை சாப்பிடவே கூடாது! ஏன் தெரியுமா? அலட்சியம் வேண்டாம்

இயற்கையான உணவுகள் நமக்கு உதவுகிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகள் பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது என்று பார்க்கலாம்.

நமது கல்லீரலுக்கு அருகில் உள்ள பித்தப்பையில் கற்கள் உருவாகும் போது தீராத வலி உண்டாகிறது. இந்த பித்தப்பை கற்களை கரைக்க மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட அதை வராமல் தடுக்கவும் அதன் அறிகுறிகளை குறைக்கவும் இயற்கையான உணவுகள் நமக்கு உதவுகிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகள் பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது என்று பார்க்கலாம்.

பித்தப்பையில் ஏற்படும் கற்கள் நமக்கு வலியையும் அசெளகரியத்தை கொடுக்க கூடியது. இதனால் அடிவயிற்றில் வலி, வயிற்று வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இந்த பித்தப்பை கற்களை சில எளிதான உணவுகள் மூலம் நம்மால் தடுக்க முடியும்.

பித்தப்பை
நம் கல்லீரலுக்கு அருகில் உள்ள பேரிக்காய் வடிவமுள்ள சிறிய உறுப்பு பித்தத்தை சேகரிக்கும் செயல்பாட்டை செய்து வருகிறது. இது உங்க உடல் கொழுப்புகளை ஜீரணிக்க உதவும் திரவமாகும். ஆனால் இந்த உறுப்பு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் சில சமயங்களில் இதில் பித்தப்பை கற்களை உருவாக்கலாம். இதனால் வலி மற்றும் அசெளகரியம் தென்படும்.

வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்று அறிகுறிகளும் தென்பட வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள் தீவிரம் அடைந்தால் உங்களுக்கு சில நேரங்களில் அறுவை சிகிச்சை ஏற்படலாம். உடல் பருமன் இதற்கு ஒரு பெரிய ஆபத்துக் காரணியாக இருக்கும். எனவே உடல் எடையை குறைப்பது நீங்கள் பித்தப்பை கற்களில் இருந்து மீள்வதற்கு உதவும்.

பித்தப்பை கற்களை அகற்ற மற்றொரு வழி நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் பித்தப்பை கற்களை நாம் விரட்ட முடியும்.

கார்போஹைட்ரேட் உணவுகள்
நம்முடைய பித்தப்பை ஆரோக்கியமாக இருக்க சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை ஆரோக்கியமற்றது. மேலும் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

​பக்கோரா போன்ற வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது. இது பித்தப்பை கற்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் மற்றொரு உணவாகும்.

​பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை. இவற்றில் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே உங்க பித்தப்பையை பாதுகாக்க இந்த மாதிரியான உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

​சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி போன்ற உணவுகள் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். அந்த உணவுகளை உடைக்க கூடுதல் முயற்சி நீங்கள் எடுக்க வேண்டும். எனவே ஆரோக்கியமான பித்தப்பைக்கு சிவப்பு இறைச்சியை தவிருங்கள்.

​முழுப்பால் பொருட்கள்
முழுப்பால் பொருட்களை உடைப்பது என்பது கடினம். மேலும் பாலினால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்குப் பதிலாக குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உண்ணுங்கள்.