ஶ்ரீதரனின் சகா வேழமாலிகிதன் கொத்து கொடுத்து பாய் விரிக்கக் கேட்ட கதை கேளீர்!!!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப பிரச்சனை தொடர்பாக இலங்கை நெற் THURSDAY, NOVEMBER 22, 2018 திகதி எழுதப்பட்ட செய்தி கட்டுரை இது

செஞ்சோலையில் வளர்ந்த பெண் கணவனற்று ஓட்டை குடுசையில்! பாய் விரிக்கக் கேட்ட சிறிதரனின் சகா வேழமாலிகிதன்! என பீமன் எழுதிய கட்டுரை இங்கே மறு பதிவாகிறது.

இது கார்த்திகை மாதம் பொதுவாக தமிழர்களில் பெரும்பாலானோரின் போலி வெளிப்படும் மாதம். இந்த மாதத்தில் ஒரு உண்மையும் வெளிப்பட்டுள்ளது. அந்த உண்மையாதெனில், கார்த்திகை மாதத்தில் யாருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களோ, அந்த அவலங்களின அடையாளம் ஒன்றை விபச்சாரியாக்கி மரணத்தின் விளிம்புக்கு கொண்டு சென்று விட்டிருக்கின்றான் சிறிதரனின் சகாவான வேழமாலிகிதன் எனப்படும் கரைச்சி பிரதேச சபை தவிசாளரான தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பிரபலம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட கோணேஸ்வரியின் கதை மிக சோகமானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த அவள் தனது சகோதரர்களுடன் செஞ்சோலையில் சேர்க்கப்படுகின்றாள். அந்த சகோதரர்களில் மூவர் பின்னாட்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு மரணிக்கின்றனர். ஒருவர் மட்டக்களப்பில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னாட்களில் புலிகளியக்தத்தில் இணைந்துகொண்ட கோணேஸ்வரி அவ்வியக்கத்தையே சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கோணேஸ்வரியின் கணவனும் இணைகின்றார். புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான கோணேஸ்வரி சகலரையும் பறிகொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் புதியதோர் சவாலான வாழ்கையை தொடங்குகின்றாள்.

கிளிநொச்சியில் திருநகர் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இடிந்து நொருங்கியுள்ள கட்டிடங்களுள் தகரங்களால் மறைப்பொன்றை உருவாக்கி கோணேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்கை எனும் போராட்டத்தை தனிமையில் ஆரம்பிக்கின்றாள். அவள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் சாதாரணமானவை அல்ல. குழந்தைகளை வழர்க்க வழியற்ற அவள் உதவிகேட்டு கிளிநொச்சி பா.உ சிறிதரனிடம் ஏதாவது வாழ்வாதார உதவி கிடைக்குமா என்று சென்றபோது அவளுக்கு நடந்துள்ள அவலத்தை கோணேஸ்வரின் குரலிலே நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

வாழ்வாதாரம் கேட்டுச் சென்ற கோணேஸ்வரியின் நிலைமையை அவதானித்துவர சிறிதரனால் வேழமாலிகிதன் அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சென்ற அவன் ஓரிருநாட்களின் பின்னர் அவளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நடுச்சாமத்தில் அவளிடம் செல்ல முற்பட்டதன் நோக்கத்தை அறிந்த கோணேஸ்வரி பயத்தின் நிமிர்த்தம் தனது பாதுகாப்பிற்காக அட்டம்பக்கத்திலுள்ளவர்களுக்கு விடயத்தை கூறியதால் தற்போது பழிவாங்கப்படுகின்றாள்.

கோணேஸ்வரியை குடியிருக்கும் காணியிலிருந்து வெளியேற்றுவதற்கு வேழமாலிகிதன் தமிழ் வாக்காளர்களால் வழங்கப்பட்டுள்ள கரைச்சி தவிசாளர் பதவியை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை இக்கடிதத்தில் கண்டு கொள்ள முடியும்.

கோணேஸ்வரி குடியிருக்கும் காணிக்கு பின்னால் கதையொன்று உண்டு. கோணேஸ்வரியின் சகோதரனால் கொள்வனவு செய்யப்பட்ட அக்காணிக்கான சட்டபூர்வமான ஆவணம் கோணேஸ்வரியிடம் இல்லை. அதற்கான காரணம், புலிகள் போலி அரசாங்கத்தை நிகழ்த்திய காலத்தில் அவர்கள் ஒரு காணிப்பதிவேட்டை காத்து வந்தனர். ஆனால் அரச காணிப்பதிவேட்டில் அது பதியப்படவில்லை. எனவே கொள்வனவு செய்யப்பட்ட காணி சட்டப்படியாக பெயர் மாற்றம் பெறவில்லை. எதுவாக இருந்தாலும் காணியை 28 லட்சத்திற்கு விற்ற அழகரட்ணம் குடும்பத்தினர் தங்களது மனச்சாட்டியின் பிரகாரம் கோணேஸ்வரிக்கு எவ்வித பிரச்சினையும் இதுவரை கொடுக்கவில்லை.

ஆனால், தனது காம முகத்தை அம்பலப்படுத்திய கோணேஸ்வரியை பழிவாங்க முற்பட்டுள்ள வேழமாலிகிதன், காணியை விற்றுள்ளவர்களுக்கு காணிப்பதிவிலுள்ள குறைபாட்டையும் சட்டரீதியாக காணியை அவர்கள் மீண்டும் விற்கலாம் என்ற விடயத்தையும் எடுத்தியம்பியுள்ளதுடன், அக்காணியை தானே ஒரு கோடி ரூபாவிற்கு விற்றுத்தருவதாகவும் அவாகளுக்கு ஆசை காட்டியுள்ள அதேநேரம், காடையர்களை கொண்டு கோணேஸ்வரியினை அக்காணியிலிருந்து விரட்டியடிக்கவும் முயன்றுள்ளான். நள்ளிரவில் அவளது குடிசையினுள் நுழைந்த காடையர்கள் அவளது குடிசையினையும் பாத்திரங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் அவர்களின் குரல்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்கின்ற தமிழரசுக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு செய்கின்ற சேவை இதுதான? நான்கு சகோதரர்களையும், கணவனையும் யுத்தத்தில் இழந்து தனது குழந்தைகளை பாதுகாக்க வழியில்லாது உதவி கேட்டு வாசற்படிக்கு வந்தவளை பாயை விரிக்க கேட்கின்றனர். சிறிதரனாலும் அவனது சகாக்களாலும் மேற்கொள்ளப்படும் முதலாவது அடாவடித்தனம் இதுவல்ல. வன்னி மக்களுக்கு இது பரீட்சயப்பட்ட ஒன்றாகிப்போய்விட்டது. சிறிதரனின் ஊடக பலம் யாவற்றையும் மறைத்துவருகின்றது. அதற்கும் அப்பால் அந்த ஊடகபலத்தை கொண்டு எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்த முடியும் என்ற மமதையில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சிறிதரனின் ஊடக பலத்திற்கு அஞ்சி கைகட்டி மௌனிகளாக நிற்கின்றனர்.

ஆனால் கோணேஸ்வரி விடயத்தில் தமிழரசுக் கட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றில் இத்தனைகால தவறுகளுக்கும் ஒரே நேரத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்! அதற்காக செய்தற்கரிய அத்தனை காரியங்களையும் செய்வதற்கு மக்கள் திரள்வார்கள் என்பதனை தமிழரசுக் கட்சியினருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

– இலங்கைநெற் –

முன்னாள் பெண் போராளிக்கு கிளிநொச்சியில் நேர்ந்த கொடுமை! உதவியின்றி துயரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like