உங்களுக்கான பிறவிக் குணம் என்ன தெரியுமா? நீங்க இப்படிப்பட்டவராம்

ஒவ்வொருவருக்கும் பிறவி குணம் என்று ஒன்று உள்ளது. இதை எளிதாக நாம் அறிந்துகொள்ளலாம்.

மனிதன் என்று எடுத்துக்கொண்டாலே அடிப்படையாக ஒரு குணம் இருக்கும்.குணங்கள் 3 வகைகளாக உள்ளது.

  • சாத்வீககுணம்
  • தாமஸகுணம்
  • இராட்சஸகுணம்

இந்த 3 குணங்கள்தான் ஒவ்வொரு குணமாக ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சூரியன் காலையில் உதிக்கும் போது சூரியன் முன் கண்ணை மூடி பார்த்தோமேயானால் வெள்ளை திரை போன்று புலப்படும்.

மதிய நேரத்தில் சூரியன் சிவப்பு திரை போன்று இருக்கும். மாலை நேரத்தில் கருப்பு திரை போல் காட்சியளிக்கும்.

வெள்ளை,சிகப்பு,கருமை இம்மூன்றும் மூன்று குணங்களை குறிக்கிறது.

வெள்ளை – சாத்வீக குணத்தை குறிக்கிறது. அமைதியை கடைபிடித்து நல்லவர்களாக வாழ்பவர்கள்.

சிகப்பு – தாமஸகுணம் .எந்த வேலை செய்வதிலும் பொறுமையாக ,சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.

கருப்பு – இராட்சகுணம்.கெட்ட எண்ணங்களை கொண்ட குணம்.பொறாமை,சூழ்ச்சி,திருட்டுத்தனம் போன்ற குணங்களை கொண்டவர்கள்.

இவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. காலையில் பிறந்தவர்களுக்கு சாத்வீககுணமும்,மதிய வேளையில் பிறந்தவர்களுக்கு தாமஸகுணமும், இரவு நேரத்தில் பிறப்பவர்களுக்கு இராட்சஸகுணமும் இருக்கும் என்று புத்தக வாயிலாக அறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

இந்த குணங்கள் தான் மனிதர்களை தங்கள் வாழ்நாள் முழுக்க வாழ்க்கையில் ஆளுமை பெற்றுஇருக்கும் குணங்கள்.