பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து தினமும் குடிங்க கோடி நன்மை கிடைக்கும்! நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா?

ஆயுர்வேதத்தில் பெருங்காயம் செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய்வுத் தொல்லையை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

வழக்கமாக இது நீரில் வேக வைக்கப்பட்டு, பேஸ்ட் செய்து, அடிவயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய வயிறு மற்றும் குடல் பகுதியைச் சுற்றி பூசப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இப்போது தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நன்மைகள்
 • பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்வதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
 • ஆயுர்வேதத்தின் படி, பெருங்காயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரைக் குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குடித்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
 • பெருங்காயத்தை நீரில் போட்டு வேக வைக்கும் போது, அதில் நீர்ப்பெருக்கி பண்புகளை உற்பத்தி செய்யப்படுகிறது.
 • இந்நீரைப் பருகும் போது, அது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்து, அனைத்துவிதமான சிறுநீரக தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பளிக்கும்.
 • ஒருவர் தினமும் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், அவர்களின் எலும்புகள் வலிமையடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
 • பெருங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.
 • ஆகவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
 • பெருங்காயத்தில் உள்ள பீட்டா-கரோட்டீன், கண்களைப் பராமரிக்க உதவுவதோடு, கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
 • மேலும் தினமும் பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடித்து வந்தால், கண் வறட்சி தடுக்கப்பட்டு, கண்கள் பளிச்சென்று பிரகாசமாக தெரியும்.
 • பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடி பாதுகாக்கும், பற்களை வலுவாக்கும் மற்றும் இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு உட்பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like