சனிக்கிழமைகளில் இதை செய்வதற்கு தவறிடாதீங்க… குடும்பம் ஓஹோனு இருக்குமாம்!

ஒவ்வொரு கிழமைகளிலும் ஒரு சில வேலைகளை செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக பூஜை செய்யவேண்டும். அந்த வகையில் சனிக்கிழமையில் ஒரு சில விஷயங்களை செய்தோமேயானால் குடும்பம் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருக்கும்.

  • ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கான சிறந்த தினம் சனிக்கிழமை.
  • உங்கள் வீட்டில் இயந்திரங்கள் பழுதுபார்ப்பதற்கு மிகச்சிறந்த நாள் சனிக்கிழமை.
  • இருசக்கர வாகனங்கள்,தையல் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை சரிசெய்துகொண்டால் நெடுநாள் நன்றாக உழைக்கும்.
  • சமையல் அறையிலும் சனிக்கிழமையில் நாம் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும்.
  • சமையல் எண்ணெய் வாங்க உகந்தநாள் சனிக்கிழமை. சமையல் அறையில் எண்ணெய் பாத்திரம் காலியாக இருந்தால் சனிக்கிழமையில் எண்ணெய் நிரப்பிக்கொள்ளுங்கள். எண்ணையினால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
  • மேலும் ஒரு கைப்பிடி அவலை காக்கா, குருவிகளுக்கு தானமாக கொடுத்தால் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தாக்கம் குறையும்.

ஆகவே மேற்கூறிய விஷயங்களை சனிக்கிழமையில் செய்து உங்கள் குடும்பத்தை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.