உள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள்! நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க!

உடல் எடையை அதிகரிப்பது என்பது சுலபமான ஒன்று. ஆனால் அதைக் குறைப்பது தான் மிகவும் கடினமான செயல் .

டயட் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதன் மூலம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற பல மாதங்கள் ஆகும்.

ஆனால் நீங்கள் பழைய உடலமைப்பை வேகமாக பெற நினைத்தால், பூண்டு நீரைக் குடியுங்கள். இது கேட்பதற்கு உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.

ஆனால் நிச்சயம் இது சிறப்பான பலனைத் தரும்.

பூண்டில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6 மற்றும் சி மற்றும் மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முக்கியமானவை மற்றும் எடையைக் குறைக்க வழிவகுப்பவை.

ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் பூண்டை உட்கொண்டு வந்தால், ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தட்டையான வயிற்றைப் பெற உதவும் பூண்டு நீர்
  • காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு நீரைக் குடித்தால், உடலினுள் மாயங்கள் நிகழும்.
  • பலருக்கும் எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெரியும்.
  • ஆனால் பூண்டு நீரைக் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக எரிக்கப்படும்.
  • சிலர் காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை பச்சையாக வாயில் போட்டு மென்று, ஒரு டம்ளர் நீரைக் குடிப்பார்கள். ஆனால் அனைவராலும் இவ்வாறு குடிக்க முடியாது.
  • ஏனெனில் பூண்டில் உள்ள காரத்தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். அத்தகையவர்கள் பூண்டு நீரைக் குடிக்கலாம்.
பூண்டு நீர் தயாரிக்கும் முறை

ஒரு டம்ளர் நீரில் 2-3 பல் பூண்டு பற்களை தோலுரித்துப் போட வேண்டும்.

இரவு முழுவதும் பூண்டை நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் பூண்டில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கும்.

மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதி டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.

எஞ்சி நீரை மதிய வேளையில் குடிக்க வேண்டும்.

இப்படி 3-4 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like