இந்த ராசியின் மீது தன் பார்வையை திசை திருப்பிய புதன் பகவான்! அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காட போகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

கடக ராசியில் புதன் பகவான்ஜோதிடத்தில் அடிப்படையாக அமைவது நவகிரகங்கள். கிரகங்களின் நகர்வைப் பொறுத்தும், ஒருவரின் ஜாதக அமைப்பைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கக் கூடும்.

அந்த வகையில் கல்வி, தனம், ஞானம் தரக்கூடிய புதன் பகவான் ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.41 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ஏற்கனவே அங்கு சூரியன் இருப்பதால் புதாத்தியா யோகம் ஏற்படுகிறது. சூரியனும், புதனும் சேர்ந்த அமைப்பினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய அமைப்பு உண்டு.

அப்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்…

ரிஷபம்
ராசிக்கு மூன்றாவது வீட்டில் புதன் பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள், இது உங்களுக்கு நிதி தொடர்பான பயனைத் தரும். நீங்கள் பிள்ளைகள் மூலம் ஒரு நல்ல தகவலைப் பெறுவீர்கள்.

உங்கள் பங்குதாரர் எல்லா விஷயத்திலும் ஒத்துழைப்பு தருவார். மேலும் உங்களுக்கும் லாபம் தரக்கூடிய நன்மை கிடைக்கும். மக்களுக்கு உதவ நீங்கள் முன்வருவீர்கள், இது சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும்.

மிதுனம்
உங்கள் ராசியிலிருந்து கடக ராசிக்கு புதன் செல்வதால் உங்களின் செல்வ நிலை உயரும். இதன் மூலம், நீங்கள் ஒரு புதிய சொத்து அல்லது பொருளை வாங்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் நிறைவான வாழ்வு வாழ பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். புதிய விருந்தினர் அல்லது குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகையால் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும், அதனுடன் நீங்கள் அறிவார்ந்த பலனைப் பெறுவீர்கள்.

மூத்தோரிடமிருந்து அல்லது குருவிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை மிக நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

கன்னி
புதன் உங்கள் ராசியிலிருந்து 11 வது இடத்திற்கு மாறப்போகிறது. இந்த நேரத்தில், புதாத்தியா யோகத்தின் காரணமாக உங்கள் தொழில் வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.

கடன் கொடுத்திருந்தால் அது எளிதாக வசூலாகும். அதுவே கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பிச் செலுத்த வாய்ப்பு ஏற்படும். பழைய நண்பர்களை நேரில் அல்லது வீடியோ கால் மூலம் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்
உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் புதன் பகவான் சஞ்சரிக்கப் போவதால் இந்த காலம் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாக இருக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்களுக்கு துறை ரீதியான முக்கிய பொறுப்பு கிடைக்கக் கூடும். அதை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் நிலவினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பயனடைவார்கள். நீங்கள் வணிகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். அதில் நீங்கள் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள்.

தனுசு
புதாதித்ய யோகா தனுசு ராசிக்கு மிக நல்ல பயனளிக்கும். இந்த கால கட்டத்தில் நீங்கள் செய்ய விரும்பும் பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு பூர்வீக சொத்து மூலம் பயனடைவீர்கள்.

இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள். அதனால் தொழில் துறையில் மற்றும் வணிகத்தில் மட்டுமல்லாமல் உத்தியோகஸ்தர்கள் பணியை திறம்பட செய்து லாபத்தையும், பாராட்டையும் பெறுவார்கள். நீங்கள் வியாபாரத்தைப் பெருக்க விரும்பினால் இந்த காலம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like