மீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..!

இயற்கை நமக்கு ஏராளமான ஆரோக்கிய உணவுகளை அளித்திருக்கிறது. அதனை முறையாக சாப்பிடும்போதுதான் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆரோக்கிய உணவுகளை படைத்த இயற்கைதான் அதனை சாப்பிடுவதற்கான சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அதன்படி சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. இதில் சில உண்மைகள் இருந்தாலும் பழங்காலம் முதலே இதில் சில மூடநம்பிக்கைகளும் உள்ளது.

அதாவது சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று முற்காலத்தில் கூறப்பட்டதால் இன்றுவரை நாம் அதனை சாப்பிடாமல் இருக்கிறோம்.

இந்த நம்பிகையில் முக்கியமான ஒன்றுதான் பாலையும், மீனையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்பது.

பாலும், மீனும் ஆரோக்கியமான உணவுகள் என்பதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஏனெனில் இந்த இரண்டுமே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று நம் அம்மா சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம்.

அறிவியல் உண்மை
அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை.

இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்.

எப்போது சாப்பிடக்கூடாது?
மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

விளைவுகள்
ஆயுர்வேத கொள்கைகளின் படி இந்த இரண்டு வித்தியாசமான உணவுமுறைகளும் உங்கள் உடலில் வெவ்வேறான விளைவுகளை உண்டாக்கும். பால் குளிர்ச்சி தன்மையுடையது, அதேபோல மீன் வெப்பத்தன்மையுடையது. இது இரண்டும் ஒரேநேரத்தில் சாப்பிடப்படும் போது அது உங்கள் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இதனால் உங்கள் உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படலாம்.

முடிவு
பாலும், மீனும் ஆபத்தான உணவுகள் என்பதற்கான எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் அவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க பல காரணங்கள் உள்ளது. ஆனால் பல கலாச்சாரங்களில் நாள்பட்ட நோய்களை குணப்படுத்த இந்த இரண்டு உணவையும் ஒன்றாக பயன்படுத்துகிறார்கள். அலர்ஜிகளும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களை தவிர இதனை அனைவரும் சாப்பிடலாம்.