பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

தலையில் பொடுகு தொல்லை இருந்தால் அவ்வளவு தான். இது நமது முழு முடியையும் விழ வைத்து விடும். பலருக்கு மண்டை சொட்டையாக மாறியதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த பொடுகுதான். பொடுகு தொல்லையை ஒழிக்க பல வகைகள் இருந்தாலும் இஞ்சியை கொண்டு செய்யும் முறை மிகவும் அற்புதமாக வேலை செய்கிறது.

இஞ்சியின் ஆற்றல் பொடுகை முற்றிலுமாக போக்க கூடியதாம். மேலும், முடி உதிர்வையும் இது தடுக்க உதவும் என ஆய்வுகள் சொல்கிறது. எவ்வாறு இஞ்சியை கொண்டு பொடுகை போக்குவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

சக்தி வாய்ந்த இஞ்சி..!

இஞ்சியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வீட்டில் இருக்கும் ஒரு அற்புத மருந்து இந்த இஞ்சி தான். இதனை நாம் பல வகையான மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் பல நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

பயன்கள் பல…

இதனால் எந்த அளவிற்கு நமது உடல் ஆரோக்கியம் அதிகம் பெறுகிறதோ, அதே போன்று தலை முடியின் ஆரோக்கியமும் அழகும் அதிகரிக்க செய்யும். குறிப்பாக தலையில் உருவாக கூடிய பொடுகை இது முற்றிலுமாக குறைக்க கூடும்.

எளிய வழி…

பொடுகை முழுமையாக ஒழிக்க இந்த இஞ்சி வைத்தியம் ஒன்றே போதும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முடியில் உள்ள பொடுகை போக்கி விடலாம்.

தேவையானவை

  • இஞ்சி சாறு 2 ஸ்பூன்
  • நெல்லி சாறு அல்லது நெல்லி எண்ணெய் 2 ஸ்பூன்
செய்முறை

இஞ்சியை நன்றாக அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு, நெல்லிக்காய் சாற்றையும் தனியாக எடுத்து கொள்ளவும். இவை இரண்டையும் கலந்து தலைக்கு தேய்க்கும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் பொடுகு தொல்லை பறந்து போய்விடும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like