கஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி! யாருக்கெல்லம் பேரழிவு தெரியுமா?

நவகிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணி பார்வைகளால் நாட்டில் சில பாதிப்புகள் ஏற்பட இருப்பதாக ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

மிதுனம் ராசியில் ராகு சுக்கிரன் சேர்க்கை செவ்வாய் ராகு பார்வையால் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படும் என்றும்

கஸ்தூரி என்ற பெயரை கொண்டவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரலாம் என்றும் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் எச்சரித்துள்ளார்.

பாலாஜிஹாசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரைக்கும் யார் யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது எச்சரிக்கை பதிவுதான் யாரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

கொரோனா பாதிப்பு பற்றி ஜோதிடர்கள் முன்பே கூறியிருக்கலாமே என்று பலரும் விமர்சனம் செய்வதால் நிகழப்போகும் பாதிப்புகளை கூறி எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன்.

சூரியன் சனி கிரக கூட்டணி
உபய ராசியில் இருக்கும் செவ்வாய் தனது பகை கிரகமான தற்போது கோச்சாரத்தில் உபய ராசியில் இருக்கக்கூடிய ராகுவை 4 ஆம் பார்வையாகப் பார்க்கிறார். மேலும் பரஸ்பர பகை கிரகமான சனி மற்றும் சூரியன் ஒருவருக்கு ஒருவர் அடுத்த 15 தினங்களுக்கு பாகை அடிப்படையில் நெருக்கமாக பார்க்கிறார்கள் இதன் விளைவு சற்று அகோரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அவை எவை என்று பார்க்கும் பொழுது செவ்வாய் 4ஆம் பார்வை பெற்ற ராகு சிம்ம ராசியை பார்ப்பதால் தனது பதினோராம் பார்வை (Anti Clock Wise )அதன் அதிபதி சூரியன் சனி என்கின்ற பகை கிரகத்தை சேர்க்கை (7 – ஆம் ) பார்வை மூலம் ஏற்படுவதால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும் என்று பார்க்கலாம்.

அச்சுறுத்தல் யாருக்கு சினிமாவில் அல்லது அரசியலில் பிரபலமான ஒரு பெண்மணி அவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஆபத்து வரலாம்.

வங்கியில் கொள்ளை அல்லது மோசடி போன்ற பிரச்சனைகள் மக்களுக்கு தெரிய வெளிப்படலாம்.scam Or Robbery. நடன கலைஞர்கள் , சங்கீத வித்வான்கள் பின்னணிப் பாடகிகள் இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரலாம்.. கண்டம் வரலாம்.

தீ விபத்துகள்
விமான விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக பார்க்கும் பட்சத்தில் பருத்தி குடோன் , வாகனம் உற்பத்தி தொழிற்சாலை, நூல் குடோன் , தங்கும் விடுதி( Lodge or Star Hotels ), கண்ணாடித் தொழிற்சாலை, சூதாடும் இடங்கள் கேசினோ போன்ற இடங்கள் சர்ச்சை பிரச்சனை ஏற்படலாம் ஏதேனும் விபத்துக்கள் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நடிகைகளுக்கு பாதிப்பு
கஸ்தூரி என்ற பெயரை கொண்டவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரலாம். புத்தகம் எழுத்தாளர் , செய்தி வாசிப்பாளர் போன்றவர்களுக்கு கிசுகிசு சர்ச்சை அல்லது கண்டம் ஏற்படலாம். திருமணம் ஆகாத கன்னி நடிகை, நடிகர்களுக்கு ஏதேனும் தற்கொலைக்கு நிகரான பிரச்சினை ஏற்படலாம், கண்டம் வரலாம்.

இது பொதுப்பலன் மட்டுமே இன்னும் 15 தினங்களுக்கு ஆசிபா போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கேனும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண் குழந்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம் அடுத்த பதினைந்து தினங்கள் இது கோச்சார பொதுபலன் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை,

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like