குறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா?

ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழப்போகிறது. தற்போது மிதுனம் ராசியில் உள்ள ராகு ரிஷப ராசிக்கு வந்து அமரப்போகிறார்.

ஒன்றரை ஆண்டுகாலம் ரிஷபம் ராசியில் இருப்பார்.

இதே போல தனுசு ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து விருச்சிகம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் ரிஷபம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் பலன்கள் வரும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பலன் 2020
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுவிற்கு ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் என மூன்று மணிநேரத்தை ராகு கேதுக்கள் ஆள்கின்றன.

ரிஷபத்திற்கு ஜென்மராகு
அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்தது. அஷ்டமத்தில் குரு கேது என பிரச்சினை நீடிக்கிறது. இந்த நிலையில் இனி ஜென்ம ராகு வரப்போகிறது. இதுவரை உங்க ராசியில் ராகு கேது இருந்த இடம் 2ல் ராகு. 8ல் கேது இருந்தது சுமாரான இடம்தான். ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே” என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார்.

ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடம் அந்த இடத்திற்கு ராகு வருகிறார்.18 வருஷம் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஒன்றறை மணி நேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு சில மாதங்களில் குரு பார்வை கிடைக்கப் போகிறது. கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது.

ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ல் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம்.

ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் சில கஷ்ட நஷ்டங்களை கொடுத்தனர். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடலாம் பாதிப்புகள் நீங்கும்.

விருச்சிகத்தில் ஜென்ம கேது
இது வரை 2ஆம் இடத்தில் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும். தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து.

ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும் அதனால் கடன் பட்டாலும் சுபகடனாக அதாவது வட்டி இல்லாமல் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு குருவுடன் சேருவதால் இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம்.கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் மூழ்கி உழைப்பு சம்பாதித்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம்.

கணவன் மனைவி பிரச்சினை ஏற்பட்டு கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம் ஏழரை சனி முடிந்தும் போராட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும். ஞாயிறன்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட குடும்பத்தில் பிரச்சினை தீரும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like