சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா? – சந்தேகத்திற்கான பதில் இதோ!

என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.

இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர்.

பெண்கள் வெளியில் செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.

பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும்.

பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள்.

அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள்.

ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.

அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.

உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 – 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள். ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.

முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like