திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.
அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும்.
அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.
நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.
அருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.
திருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம்.
நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.
அப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.
திருநீறு எப்படி மருந்தாகிறது?
பசு மாட்டுச் சாணத்தை எரிப்பதால் திருநீறு உருவாகும். அதாவது மாடு அறுகம் புல் உள்ளிட்ட புல் வகைகளை உண்ணுகிறது. அதனை தன் உடலினுள் தேற்றி வைத்து பின் சாணம் போடும். அந்த சாணம் தீயிட்டு எரிக்கும் போது உருவாகும் சில ரசாயன மாற்றங்கள் நம் உடலுக்கு தேவையான நன்மையை கொடுக்க வல்லது.
நெற்றி பகுதி மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ளதால் அதை வைத்து சில மனோ வசியம் செய்ய முடியும். அப்படி மன வசியத்தை தடுக்கும் ஆற்றல் திருநீறு, சந்தனத்திற்க்கு உண்டு.