ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் ஒருவர் கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் மனதிற்கும், உடலிற்கும் உற்சாகமும், அமைதியும் கிடைக்கும்.
கோவிலினுள் கர்ப கிரகத்தில் உள்ள இறைவனை வணங்கிவிட்டுதான் கோவில் பிரகாரத்தை வலம் வரவேண்டும்.
அப்படி வலம் வரும் சமயத்தில் நிறையபேர் ஒருசில தவறுகளை செய்கின்றனர்.
ஒரு சிலர் பேசிக்கொண்டே நடப்பார்கள், மேலும் ஒரு சிலர் அவசரமாக ஓட்டமும் நடையுமாக நடப்பார்கள்.
இவ்வாறு செய்வதை நாம் தவிர்க்கவேண்டும்.
கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது பயபக்தியுடன் பொறுமையாக வலம் வரவேண்டும்.
கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரியாது. எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
- 1 முறை கோவில் பிரகாரத்தை வலம்வந்தால் இறைவனை நாம் அணுகுதல் என்று பொருள்.
- 3 முறை வலம் வந்தால் நமக்கு இருக்கக்கூடிய மனக்கஷ்டம் நீங்கும்.
- 5 முறை வலம் வந்தால் இஷ்ட தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும்.
- 7 முறை வலம் வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
- 9 முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
- 11 முறை பிரகாரத்தை சுற்றி வந்தால் ஆயுள் விருத்தியாகும்.ஆயுள் பலப்படும்.எந்தவித நோயும் நம்மை அண்டாது.
- 13 முறை வலம் வந்தால் நம் வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும்.
- 15 முறை வலம் வந்தால் தனப்பிராப்தி உண்டாகும்.
- 17 முறை வலம் வந்தால் விவசாயி தொழிலாளிகளுக்கு விவசாயமானது செழிக்கும்.உங்கள் வீட்டில் தானிய பஞ்சம் இருக்கவே இருக்காது.
- 19 முறை வலம் வந்தால் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
- 21 முறை வலம் வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
- 23 முறை வலம் வந்தால் சகல சௌபாக்கியத்துடன் வாழக்கூடிய யோகம் கிடைக்கும்.
- 108 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- 208 முறை வலம் வந்தால் யாகம் செய்த பலனை பெறலாம்.
ஆகவே இதில் உங்களுக்கு எது தேவையோஅத்தனை முறை கோவிலின் பிரகாரத்தை வலம் வந்து இறையருளை பெறுங்கள்.