நினைத்த காரியம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?

நாம் நினைத்தது நடக்க வேண்டுமெனில் முதலில் நமக்கு இறைவனின் அணுகிரகமும், பித்ருக்களின் ஆசியும், குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்கவேண்டும்.

நாம் நினைக்கும் காரியம் நடக்கவில்லை எனில் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் முதலில் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

நினைத்த காரியம் நடக்கவில்லை என்பதற்கு ஒரு முக்கிய காரணம் கர்மவினைகள். நினைத்தது நடக்கவேண்டும் என்பவர்கள் அறம் சார்ந்த வாழ்க்கையை வாழவேண்டும்.

மனதளவிலும்,சிந்தனை,செயல் போன்றவற்றில் நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவருக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகமானால் ஆசைகள் அதிகமாகும்.

ஆகவே திருப்தி என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கவேண்டும். ஜபமாலைகளை பயன்படுத்தி ஸ்லோகங்கள், மந்திரங்கள் கூறும்போது அந்த மாலையை ஒரு சுத்தமான துணியால் மூடி ருத்ராட்ச மாலை அல்லது படிகமாலை உருட்டி பிரார்த்தனை செய்தால் நல்லெண்ணங்கள் நேர்மறையான ஆற்றல் வெளியே செல்லாமல் நமக்குள் சென்று நாம் நினைத்த காரியத்தில் வெற்றியை தரும்.

ஜபமாலைகளை மண்பானையில் வெட்டிவேர் போட்டு அதன் மேல் வைத்து மண் பானையை மூடி வைக்கவேண்டும்.

நாம் உடல் அளவிலும் மனதளவிலும் ஒழுக்கமாக இருந்தாலே நாம் நினைத்தகாரியங்கள் நிச்சயம் நடக்கும்.