உக்கிர நிலையில் கோவப்படும் ஸ்திர ராசிகள் யார் யார் தெரியுமா? உங்களின் குடும்ப நிலை எப்படி இருக்கும்?

ராசிகளில் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என மூன்று வகை உள்ளன. அதில் மிக நிலையான, உறுதியாக இருக்கக் கூடிய ஸ்திர ராசி பட்டியலில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன உள்ளன.

இவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும். இவர்களுக்கு அமையக் கூடிய துணை எப்படி அமையும், வாழ்க்கை எப்படி செல்லும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் ஸ்திர ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணை கூட ஸ்திரமானவர்களாக அமைவார்கள்.

இதனால் இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லாத நிலை இருக்கும் என்பதால் இருவருக்கும் இடையேயான சண்டை விடியும் வரை தீராது.

ரிஷப ராசியினர் சுக வாழ்வு வாழ ஆசைப்படுவர். அதே சமயம் நன்றாக பணம் சம்பாதிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். குடும்பம் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். பிறர் பொறாமை கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாய் அமையும்.

ஆனால் அவர்களுக்கிடையே பனிப்போர் அடிக்கடி வரக்கூடும். அதே போல் மருத்துவ செலவு அடிக்கடி வரக்கூடும்.

சிம்மம்
சிம்மம் என்றாலே ஆளுமை தான். அவர்கள் எப்போதும் அற்றவரை ஆளுதல், ஆதிக்கம் செலுத்த வெண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் துணை சிங்கத்திடம் சிக்கிய மான் போன்று தான் தவிக்கும். துணை மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் அவ்வப்போது குடும்ப உறவு அடிக்கடி மோசமான நிலைக்கு சென்று வரும்.

தொழில், உத்தியோகத்தில் பக்தி உடையவர்களாக இருப்பார்கள். இவர்களைப் போல் ஆளுமை யாரும் செலுத்த முடியாது அதே சமயம் மிகவும் அர்ப்பணிப்பு கொண்டவராக இருப்பார்கள். இவர்களின் குணமும், நடவடிக்கையும் பலாப்பழம் போல இருக்கும். மேலே பார்க்க முள், கரடு முரடாக இருக்கும். ஆனால் உள்ளே சுவையான பலாச்சுளை இருக்கும்.

இவர்களை மட்டம் தட்டுவதை விரும்ப மாட்டார்கள். ஆன்மிகம், பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், அவரின் வாழ்க்கைத் துணையும் அப்படியே அமையும்.

விருச்சிகம்
இவர்கள் எப்போதும் கோபப்படக்கூடியவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு மிக நல்ல துணை அமையும். இருப்பினும் இவர்கள் துணையை அடிக்கடி துன்புறுத்திக் கஷ்டப்படுத்துவர். இவர்கள் விரும்பியது போலவே அழகு, நற்குணம், இனிமையானவராக, நன்றாக சம்பாதிக்கக் கூடிய துணை அமைந்தாலும், துணையின் உறவுகளிடம் காட்டும் ஈடுபாடு விருச்சிக ராசிக்கு பிடிக்காது.

அன்பு, பாசம், அமைதியான வாழ்க்கை அமைந்தாலும், பல நேரங்களில் மாமியார் பிரச்சினை தலை தூக்கும். மாமியாரை மதிக்கக் கூடியவர்களாக துணை இருந்தாலும், மாமியாரின் ஆளுமை, ஆதிக்கம் அவர்களுக்கு பிரச்னையாக இருக்கும்.

கும்பம்
மிக நல்ல தேர்வாகத் தான் உங்களின் துணை அமையும். எதிலும் மிக சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய வாழ்க்கை துணை அமையும். சற்று தற்பெருமையும், ஆணவமும் கலந்து பேச்சு இருக்கும். ஆனால் நல்லவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மை கொண்டவர்களாக, அதை விரும்புபவர்களாக வாழ்க்கைத் துணை அமையும்.

அதனால் இருவருக்கும் இடையே அகங்காரம் தலை தூக்கும். இறை பக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை மிக்க நபர் துணையாக அமையும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like