வக்ரமடைந்த புதனில் ஏற்பட போகும் மாற்றத்தால் யாருக்கு பேரதிர்ஷ்டம்? இந்த ராசிக்கு ஆபத்து காத்திருக்கிறது… எச்சரிக்கை

நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்று நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி நேயர்களே,
ஐப்பசி மாதத்தில் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார்.

அரசு தொழில், அரசு வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உங்க ராசி நாதன் செவ்வாய் ராசிக்கு 12ஆம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சகோதரர்களிடம் பேச்சு வார்த்தை பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும்.

மேஷம் ராசிக்கு எட்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் திருமண யோகம், சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

லாபங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. முருகப்பெருமானை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்கலாம். ஐப்பசி மாதம் 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5.28 முதல் ஐப்பசி 5ஆம் தேதி புதன்கிழமை காலை 8.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.

ஐப்பசி மாதம் 30ஆம் தேதி பகல் 1.38 மணி முதல் இரண்டு நட்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

ரிஷபம் ராசிக்காரர்களே,
ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்குள் ராகு, நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் கேது, எட்டாம் வீட்டில் குரு, ஒன்பாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மிகச்சிறப்பான யோகம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும்.

பேச்சின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். தன வரவு இரட்டிப்பாகும். குடும்பத்தில் வம்ச விருத்தி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரும் கவனம் தேவை.

அரசு பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மீக பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படும்.

செவ்வாய் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் பிசினஸ் லாபத்தை கொடுக்கும். ஐப்பசி 5ஆம் தேதி புதன்கிழமை காலை 8.33 மணி முதல் 7ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. வீண் வம்பு வழக்குகள் தவிர்க்கவும்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles