கழிவறைக்கு சென்று வந்த பின் சோப்பு போட்டு கை கழுவவில்லை என்றால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

அக்டோபர் 15 உலக கைக்கழுவுதல் தினமாகும்.

இந்த கொரோனா காலத்தில் கை கழுவும் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோம்.

சில தருணங்களில் கை கழுவ வேண்டியது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

அந்த வகையில் கழிவறை சென்று வந்தபின் கைகளை சோப்பு போட்டு கட்டாயம் கழுவ வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் என்ன?

கழிவறை சென்று வந்தபின் கைகளை கழுவாமல் விடுவது நமக்கு விஷமாக மாறும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் இங்கிலாந்தில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 40,000 பேர் நோயால் அனுமதிக்கப்படுவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதாவது கழிவறையை பயன்படுத்தியபின் கைகளை கழுவாமல் விடுவதால் இ.கோலி மற்றும் ஹெச் பைலொரி ஆகிய இரு பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக் கொண்டிருப்பதாகவும், அது ஃபுட் பாய்சனாக மாறும் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதோடு எதிர்பாராதவிதமாக கண்களில் கைகளை வைத்தாலும் கண்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும்.

குறிப்பாக அதில் உள்ள ஹெச் பைலொரி பாக்டீரியாவானது அல்சர், வயிற்றுப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles