30 வயதை தாண்டி விட்டீர்களா…….? அப்படியானால் இந்த உணவு வகைகளை தொட்டுக்கூட பார்க்காதீர்கள்………!!…

தற்போதைய காலகட்டத்தில் 30 வயதை எட்டிய பலரும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சரும சுருக்கம், மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என பல உடல்நலக் கோளாறுகள் மூலம் அவஸ்தைப்படுகிறார்கள்.

இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். எனவே 30 வயதிற்கு மேல் ஆனவர்கள் ஆரோக்கியமற்ற சில உணவுகளை தவிர்த்தாலே போதும்.

போத்தல் சூப் வகைகள்:இன்ஸ்டன்ட் கேன் சூப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் உப்பு போன்றவை ஏராளமான அளவில் உள்ளது.அதனால் அவற்றை 30 வயதிற்கு மேலானவர்கள் சாப்பிடக் கூடாது.

ஏனெனில், அதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

குளிர்பானங்கள்:

டயட் குளிர்பானங்கள் பார்ப்பதற்கு கெமிக்கல் குறைவாக சேர்க்கப்பட்டிருப்பது போன்று இருக்கும். ஆனால் அவற்றில் நிறத்திற்காக புரோமினேட்டட் வெஜிடேபிள் ஆயில் மற்றும் ராக்கெட் எரிபொருள் மற்றும் எரிவதற்கு பயன்படும் ஒரு வகையான கெமிக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பானங்களைக் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளம் பாதிப்பு, உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை அதிகரிக்கும்.

சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள்:
சர்க்கரை உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் சர்க்கரைஉணவுகளில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்திவிடும்.பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளான சலாமி மற்றும் ஹாட் டாக்ஸ் போன்றவற்றை ஆண்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.ஏனெனில், அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், விந்தணு தரத்தைக் குறைப்பதோடு, உடலில் கெட்ட கொழுப்புக்களை அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

பாப்கார்ன்:

பாப்கார்ன் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ். கடைகளில் விற்கப்படும் பாப்கார்ன்களில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்துள்ளது.இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் பாப்கார்னை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சோயா சோஸ்:

சோயா சோஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. அதிலும் பாக்கெட் சோயா சோஸில் ஏராளமான அளவில் கெமிக்கல்களும், சோடியத்தின் அளவும் உள்ளது. எனவே சோயா சோசோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.