தொப்பையை குறைக்க உதவும் சில அற்புத இயற்கை பானங்கள்! என்னென்ன என்பதை பார்ப்போம்

பொதுவாக இந்த காலத்தில் பலரும் சந்தித்து வரும் மாபெரும் பிரச்சினைகளிலும் ஒன்று தான் தொப்பை பிரச்சினை

இது அதிக அளவிலான கொழுப்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்வது போன்ற காரணிகளால் தொப்பை வருகின்றது என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி அதிகப்படியான கொழுப்புகள் நிறைந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகளும் தொப்பையை அதிகப்படுத்துகிறது.

இதனை குறைக்க வேண்டும் என்றால் இயற்கை பானங்கள், இயற்கை உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் தற்போது தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் சில அற்புத பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில், அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இது குறைந்த கலோரி கொண்ட ஓர் பானமாகும். இது உங்கள் பசியை குறைக்க வல்லது மற்றும் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடுவதில் இருந்து உங்களைத் தடுக்கிறது.

  • ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உங்கள் தொப்பை கொழுப்பை உருக்கும்.
  • இரண்டு தேக்கரண்டி உலர்ந்த மற்றும் வறுத்த ஓமவிதைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின்பு, வயிற்று கொழுப்பை இழக்க, மறுநாள் காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சையின் சாற்றை பிழிந்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தால் உங்களின் பானம் தயாராகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் அதை முதலில் குடித்தால், அது உங்கள் வயிற்று கொழுப்பை எரிக்க உதவும். மேலும், இது உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
  • அதிகாலையில் ஒரு கப் கிரீன் டீ குடித்து வருவது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை இழக்க உதவும். கிரீன் டீ உங்கள் பசியை அடக்கி, பகலில் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடாமல் தடுக்கும்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles