பிறந்தது ஆயுத பூஜை! இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன?

பொதுவாக ஆயுத பூஜை அன்று வீட்டில் பூஜை செய்யும் போது, சமையலறையில் இருக்கக்கூடிய, சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்கள், மற்றும் குழந்தைகள் படிப்பதற்காக வைக்கக் கூடிய புத்தகங்கள், அவரவர் தொழிலுக்காக பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இவைகளுக்கு பூஜை போடுவார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

மேலும், ஆயுதபூஜை வழிபாட்டை செய்யும்போது, சமையலறையில் இருக்கக்கூடிய அஞ்சறைப் பெட்டி, ஆழாக்கு அல்லது அரை படி அல்லது படி, உங்கள் வீட்டில் சமையலுக்கு அளப்பதற்கு எதை பயன்படுத்துவீர்களோ அது, அடுத்ததாக சமையலறையில் பயன்படுத்தும் ஆயுதம் கத்தி, அருவாமனை, எதுவாக இருந்தாலும் சரி.

இந்த மூன்று பொருட்களையும் சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, கட்டாயம் தீப, தூப ஆரத்தி காட்டி வழிபட வேண்டும் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், சுத்தம் செய்த அஞ்சறைப் பெட்டி, சுத்தம் செய்த ஆழாக்கு, சுத்தம் செய்த அருவாமனை அல்லது கத்தி இந்த பொருட்களை வெறுமனே பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதைவிட, அந்த அஞ்சறைப் பெட்டிக்குள் ஓரிரண்டு தானியங்களையோ அல்லது ஓரிரண்டு ஏலக்காய்களையோ அல்லது கிராம்பையோ போட்டு பூஜை செய்யலாம்.

அரிசியை அளக்கும் ஆழாக்கு உள்ளே ஒரு கைப்பிடி அரிசியை போட்டு பூஜை செய்யுங்கள். கத்தியில் ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகி வைத்து விட்டு அதன் பின்பு பூஜை அறையில் வையுங்கள்.

குழந்தைகள் படிக்கின்ற புத்தகத்தில் கூட, எழுதாத, வெறுமனே பேப்பர் இருக்கும் புத்தகத்தை வைக்கக்கூடாது. அவர்கள் எழுதி படித்து பயன்படுத்திய புத்தகங்கள், அலுவலகங்களாக இருந்தால், அவர்கள் எழுதி பயன்படுத்திய கணக்கு நோட்டுப் புத்தகங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது தான் சிறப்பு.

மேலும், இத்தோடு சில பேருக்கு உப்பு ஜாடியை வைத்து பூஜை செய்யும் பழக்கமும் இருக்கும். அந்த உப்பு ஜாடியை வெறுமனே காலியாக வைக்காமல், ஒரு கைப்பிடி அளவு உப்பை போட்டு வைக்கலாம்.

சில பேர் ஆயுத பூஜைக்கு பூஜை அறையில் வைத்த, பொருட்களை அடுத்த நாள் வரை, பூஜை அறையில் இருந்து எடுக்க மாட்டார்கள். உங்களுடைய வீட்டு வழக்கம் எதுவோ அப்படியே செய்யுங்கள்.

ஆனால், பூஜை அறையில் இருந்து எடுத்த பொருட்களை சமையலறைக்கு கொண்டுபோய், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை, உடனடியாக அந்த டப்பாக்களில் நிரப்பி வைத்து விடுங்கள்.

பூஜை அறையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்களில் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். இப்படி நிறைவான ஆயுத பூஜையை கொண்டாடி நமக்கு அடுத்து வரும் சந்ததியினரை காப்பாற்றுவோம்…

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles