அந்த வார்த்தையை பயன்படுத்தி அசிங்கப்பட்ட அனிதா! வாயில் சனிதான் அமர்ந்திருக்கு? கொதித்தெழுந்து வெடித்த சுரேஷ்

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் கிராமம், நகரம் என இரண்டாக பிரிந்து டாஸ்க்குகளை செய்தனர்.

இதில் அனிதா பேசும்போது கணவனை இழந்த பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என எடுத்து கூறினார்.

குறிப்பாக மங்கல நிகழ்ச்சிகளில் சுமங்கலி பொண்ணுங்க முன்னால வாங்க என்று தான் அழைக்கின்றனர் என தெரிவித்தார்.

அனிதா பேசுவதற்கு முன் சுரேஷ் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்ததால், அவரை எடுத்துக்காட்டாக கூறி பின்னர் சமாளித்து தன்னுடைய உரையை அவர் முடித்தார்.

இதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றையும் வெளிப்படையாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு நிஷா, ரியோ, ஆரி ஆகியோர் இதுமாதிரி பேச வேண்டாம் என அட்வைஸ் பண்ணினர்.

அனிதா எப்படி இந்த மாதிரி பேசலாம் என சுரேஷும் பார்ப்பவர்கள் அனைவரிடமும் எடுத்து கூறிக்கொண்டு இருந்தார். ஒருகட்டத்தில் அனிதா வந்து மன்னிப்பு கேட்டும் அவர் அதை அவ்வளவு சீக்கிரம் விடுவதாக தெரியவில்லை.

அர்ச்சனாவிடம் அனிதா வாயில் சனி அமர்ந்து விட்டதாக குறிப்பிடுகின்றார். தனக்காக பேசுமாறும் கூறுகின்றார்.

கேபி, ரியோ என பார்ப்பவர்கள் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு பெருசா ஆக்குறாரு? என அனிதாவுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். இது வாக்குகளிலும் எதிரொலிக்குமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles