இந்த வாரம் சூரியன் துலாம் ராசியில் நீச்சமடைந்துள்ளார். கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சமடைந்துள்ளார்.
மீனம் ராசியில் செவ்வாய், ரிஷபம் ராசியில் ராகு, விருச்சிகத்தில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும், பொருளாதார நெருக்கடிகள் நீங்கும் சந்திரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான இடங்களில் சஞ்சரிக்கிறார்.
உங்க ராசிநாதன் விரையத்தில் இருப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அதிகரிக்கும். சந்திரனால் நினைத்தது நிறைவேறும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திடீர் அதிர்ஷடம் தேடி வரும். இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியம் தடை நீங்கி நடைபெறும்.
வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குரு பார்வையினால் திருமண யோகம். தாய்மாமன் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலைகள் முயற்சி செய்யலாம். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்ட நல்ல செய்தி தேடி வரும். வெள்ளிக்கிழமை முதல்நாளில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்குங்கள்.
ரிஷபம்
இந்த வாரம் நல்ல செய்திகள் அதிகம் தேடி வரும். மிக சிறந்த யோகம் கிடைக்கும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரமாகும், நிறைய எதிர்மறை எண்ணங்கள் வரும் அதை நேர்மறை எண்ணங்களாக மாற்றி வெற்றிகரமானதாக மாற்றுங்கள்.
வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தைகளில் செய்யும் முதலீடுகளால் லாபம் வரும். கடன் பிரச்சினை குறையும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல செய்தி தேடி வரும். உதவிகள் தேடி வரும் மாற்றங்கள் நிறைந்த வாரம். நம்பிக்கை நிறைந்த வாரம் புதிய பதவிகள் தேடி வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். அக்கம்பக்கத்தினரிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
வேலையில் பிரச்சினைகள் இருந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கலாம். வங்கியில் கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு விளக்குப் போடுங்கள். இந்த வாரம் ராஜயோகம் தேடி வரும்.
மிதுனம்
இந்த வாரம் உங்க ராசிக்கு நல்லது நடக்கும் நேரம் வந்து விட்டது. இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனதளவில் இருந்த துயரங்கள் தீரப்போகிறது. புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிப்பதால் நல்லது நடக்கும். சொந்த பந்தங்களிடைய இருந்த சிக்கல்கள் நீங்கும்.
சுப செலவுகள் வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். குரு பார்வையால் உங்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்புகள் வரும். உங்களின் மதிப்பும் மரியதையும் கூடும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பா வழி உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
விரைய ஸ்தான ராகுவினால் மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்க ராசிக்கு அஷ்டம சனி இருப்பதால் பாதிப்பு அதிகம் வரும் என்று நினைக்காதீர்கள் தடைகள் நீங்கும் அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும்.
குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமண யோகம் கைகூடி வருகிறது. சகோதர சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதையும் நேர்மறையாக எண்ணுங்கள். சிக்கல்கள் நீங்கும். கடன் பிரச்சினை நீங்கும். புதிய வாய்ப்புகள் வரும். செவ்வாய்கிழமை முருகனை வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கடகம்
மூன்றில் சுக்கிரன் நீச பங்கம் பெற்று சஞ்சரிப்பது சிறப்பு. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் லாபம் வரும். போட்டி பந்தையங்களில் வெற்றி கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பொருளாதார தடைகள் நீங்கும். செலவுகள் அதிகம் வரும் வருமானம் அதிகரிப்பதால் எளிதில் சமாளிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வெளியூர் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். பயணங்களால் நன்மை நடைபெறும் . அவசரப்படாமல் யோசித்து முடிவு எடுங்கள். பழைய பிரச்சினைகள் நீங்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்வதால் சில தடைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைமை பதவி தேடி வரப்போகிறது. பெண்கள் பொறுமையுடனும் கவனத்துடனும் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
வேலையில் பிரச்சினைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வேலைக்காக புதிய முயற்சிகள் வேண்டாம் பொறுமை தேவை. திங்கட்கிழமை சிவன் கோவில் சென்று வழிபடுவது சிறப்பு.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறப்போகிறது. பணப் பிரச்சினைகள் நீங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் திருமண யோகம் வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
சிலர் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாம். யாராக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் நெருப்பு விசயத்திலும் கவனம் தேவை. குரு பார்வை இருந்தாலும் எதையும் பொறுமையாகவும் நிதானத்தோடும் இருப்பது நல்லது.
அரசு வேலைகள் அரசியல்வாதிகள் கவனம் தேவை. இல்லத்தரசிகள், வேலைக்கு செல்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பத்தில் ராகு பதவியில் மாற்றம் வரலாம். சகோதர சகோதரிகளிடம் பேசும் போது சொத்து பாகப்பிரிவினை விசயங்களில் நிதானமாக பேசுங்கள்.
கன்னி
இந்த வாரம் உங்க ராசி நாதன் புதன் இரண்டாம் வீட்டில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். புதிய முயற்சிகள் தடைகள் நீங்கி நடைபெறும். தொழிலில் மாற்றம் வரும். அரசு வேலையில் இருப்பவர்கள் நிதானமாகவும் கவனமாக இருப்பது நல்லது.
திடீர் யோகம் வரும். வேலை, தொழிலில் மாற்றம் வரும். அரசியல்வாதிகளுக்கு பொறுமை அவசியம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரலாம் கவனமாக காய் நகர்த்தவும். அதிக பணவரவு வரும், தொழில் வியாபாரம் லாபமடையும். வேலையில் மாற்றம் ஏற்படும்.
நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். மாணவர்கள் புதிய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். புத்திர பாக்கியம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திடீர் திருமண யோகம் அமையும் காரணம் செவ்வாய் சுக்கிரன் பார்வை, காதல் உருவாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
துலாம்
ராசியில் சூரியன் புதன் சஞ்சரிக்கின்றனர். நினைத்தது சாதிக்கலாம். இந்த வாரம் பண வரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள். வீடு சொத்துக்கள் வாங்குவதன் மூலம் வீண் செலவுகள் தவிர்க்கப்படும். உறவினர்களுக்கு உதவி செய்யுங்கள்.
இந்த வாரம் உடல் நலத்தில் அக்கறை காட்டவும், கோபத்தை குறைக்கவும். வீண் செலவுகளை குறைக்கவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் மோதல்கள் வரும் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வாரம் பதவிகள் புரமோசன் தேடி வரும்.
பெண்கள் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிலும் வேலை செய்பவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
துலாம்
ராசியில் சூரியன் புதன் சஞ்சரிக்கின்றனர். நினைத்தது சாதிக்கலாம். இந்த வாரம் பண வரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள். வீடு சொத்துக்கள் வாங்குவதன் மூலம் வீண் செலவுகள் தவிர்க்கப்படும். உறவினர்களுக்கு உதவி செய்யுங்கள்.
இந்த வாரம் உடல் நலத்தில் அக்கறை காட்டவும், கோபத்தை குறைக்கவும். வீண் செலவுகளை குறைக்கவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் மோதல்கள் வரும் விட்டுக்கொடுத்து செல்லவும்.
வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வாரம் பதவிகள் புரமோசன் தேடி வரும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிலும் வேலை செய்பவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, புதிய வேலை கிடைக்கும். சகோதரர்கள் மூலம் லாபம் வரும். சொத்து பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
வேலையில் சிக்கல் வந்தாலும் எளிதில் நீங்கும். களத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே சின்னச் சின்ன விவாதங்கள் நடைபெறும் கணவன் மனைவி பிரச்சினையில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம்.
நீங்களே பேசி சமாளியுங்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மன நிம்மதி தரும் வாரம். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடைபெறும் கடையை விரிவுபடுத்துவீர்கள் லாபம் கிடைக்கும்.
ராசியில் கேது இருப்பதால் சின்னச் சின்ன மனக்குழப்பம் வரும் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
தனுசு
தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு அதிகரிக்கும். துணிச்சலுடன் எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பாரத சந்திப்புகள் மூலம் திடீர் பண வரவு வரும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும். பேச்சில் நிதானம் தேவை வாக்குக்கொடுத்து விட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் மூலம் இடைஞ்சல்கள் வரலாம் கவனம் தேவை.
பத்தில் சுக்கிரன் இருப்பதால் சுய தொழில் செய்யும் யோகம் கூடி வருகிறது. நண்பர்கள் உதவியால் தொழில் செய்யலாம். கூட்டுத்தொழிலில் லாபம் வரும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் நன்மை நடக்கும்.
மகரம்
இளைய சகோதரர்கள் மூலம் லாபம் கிடைக்கும். சமூகத்தில் கவுரவம் உயரும் பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். சொந்த தொழில் செய்யும் யோகம் கூடி வருகிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.
திடீர் வாய்ப்புகள் வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். பதவி உயர்வும், பதவியில் இடமாற்றமும் வரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நல்ல வாரம்.
மதிப்பு மரியாதை கூடும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஏழரை சனியால் சோதனைகள் வரலாம் கவனம் தேவை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சனி குரு சேர்க்கையால் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும்.
லாப ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் திடீர் லாபத்தை கொடுக்கும். நவம்பர் 09ஆம் தேதி காலை 08.42 மணி முதல் நவம்பர் 11 நண்பகல் 12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.
கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, விரைய சனி என்பதால் செலவுகள் அதிகமாகவே இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப செலவுகள் செய்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு கவனம் தேவை. அரசு வேலை செய்பவர்களுக்கு திடீர் பதவி உயர்வு தரும். சுக்கிரன் எட்டில் இருப்பதால் விலை உயர்ந்த பணம் நகை விசயத்தில் கூடுதல் கவனம் தேவை. இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதற்கான காலம் கை கூடி வந்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புரமோசன் கிடைப்பதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
தொழில் வியாபாரத்தில் நிதானமும் பொறுமையும் தேவை. திருமண சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடுங்கள். குல தெய்வ வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும். நவம்பர் 11 நண்பகல் 12 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்குள் செவ்வாய், மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சுபமான செய்திகள் தேடி வரும். செய் தொழில் லாபத்தை கொடுக்கும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இந்த வாரம் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வேலைக்கு செல்பவர்கள் உங்க வேலையில் கவனம் செலுத்துங்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் கை கூடி வருகிறது. புதிய முயற்சிகள் கை கூடி வரும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பொறுமையும் நிதானமும் தேவை.
கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வரலாம் கவனம்.எந்த காரியம் செய்வதற்கு முன்பாகவும் முருகனை வழிபடுங்கள்.