இன்றைய இந்திர ஏகாதசியில் இதை மட்டும் செய்யுங்கள்.. நன்மைகள் அனைத்தும் தேடிவருமாம்..!

உலகில் நாம் வாழும் வாழ்க்கைக்கு காரணமே நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தை மற்றும் அவர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் எனும் நமது முன்னோர்கள் தான்.

நாம் வாழும் காலத்தில் நம்முடைய நன்மையை மட்டுமே மறைந்த நமது முன்னோர்கள் வேண்டுகின்றனர். மறைந்த நம் முன்னோர்களை வழிபடும் மரபு நம் நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகின்கிறது.

மறைந்த முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கும், பெருமாளை வழிபடுவதற்கும் சிறந்த தினமாக ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி வருகிறது.

இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி குறித்தும், இந்த தினத்தில் விரதம் அனுஷ்டிப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதம் என்பது சூரியன் புதன் பகவானுக்குரிய கன்னி ராசியிலிருந்து, சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் ஒரு காலமாகும்.

மனிதர்களுக்கு அனைத்து விதமான சுக போகங்களை அளிக்கின்ற நவகிரக நாயகனாக சுக்கிர பகவான் இருக்கின்றார். எனவே தான் இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் சுப காரியங்கள் அதிகளவில் விரும்பி செய்யப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐப்பசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு வாசம் மிகுந்த பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும்.

பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் போட்டுவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

நாள் முழுவதும் விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.