குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீடு எட்டாம் வீட்டிற்கு உடையவர். ஆறாம் வீட்டில் குரு நீச்சம் பெற்று சஞ்சரிப்பார்.
சனியோடு குரு இணைகிறார். நல்ல தன வரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.
குரு ஆறாம் இடத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ஆறாம் இடத்தில் சகடை யோகமாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை.
குருவின் பார்வையால் நிறைய நல்லது நடக்கப் போகிறது. குருவின் பார்வை உங்க ராசிக்கு 2, 10, 12ஆம் இடங்களின் மீது விழுகிறது.
குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் உங்களுக்கு பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
குருவிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அம்மாவின் சொல் கேட்டு நடந்து கொள்ளுங்கள். 12ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் தூர தேச பயணம் செல்ல முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.
வெளிநாடு சென்று கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். வேலை விசயமாக வெளிநாடு செல்லலாம்.
ராசிக்கு பத்தாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் பத்தில் ராகு இருக்கிறார். குருவின் பார்வையால் தொழில் வேலையில் உயர்வு ஏற்படும். குருவின் ஆசியால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கடந்த காலங்களில் வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை நிரந்தரமடையும். சிலருக்கு சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். பட்டம் பதவிகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பண வரவு அதிகரிக்கும்
கடந்த காலங்களில் குரு ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்தாலும் சனி, கேது உடன் இணைந்து நிறைய தடைகள் ஏற்பட்டது. இப்போது குரு உடன் இருந்த கேது விலகிவிட்டது.
பண வரவு அதிகரிக்கும். வார்த்தைக்கு மதிப்பு மரியாதை கூடும். பேச்சினால் தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். முகம் தெரியாதவர்கள், அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பழக்க வழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
புத்திர பாக்கியம் கிடைக்கும்
குரு ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும்.
சிலர் புது வீட்டிற்கு குடிபோகும் யோகம் வருகிறது. குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகளுக்கு தோஷம் விலகி குரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கப் போகிறார். பிள்ளைகளினால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். 2021 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமண யோகமும் கை கூடி வரப்போகிறது.
கடன் விசயத்தில் கவனம்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகள் உருவாகுவார்கள் கவனம் தேவை. தேவையில்லாத கடன் சுமைகளை ஏற்றிக்கொள்ள வேண்டாம். கடன் பிரச்சினை நீங்கும் சுப காரியங்களுக்காக புதிய லோன் வாங்குவீர்கள்.
குரு பகவானுக்கு பரிகாரம்
இந்த குரு பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வயிறு பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று அம்மனுக்கு மல்லிகைப்பூ கொடுத்து வணங்கலாம்.
பாதிப்புகள் நீங்க முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குங்கள்.