யாழ்தீபம் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள் அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.

காலை மற்றும் மாலை வேளையில் பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர்.

உலக சூழ்நிலை அறிந்து நாட்டின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி கோலாகலமான இத் திருநாளை சந்தோஷமாக கொண்டாடும் எங்களது அன்பு நிறைந்த யாழ்தீபம் வாசக சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் யாழ்தீபம் பெருமை அடைகிறது.

இன்றைய நாள் நன்னாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றோம்.