உங்க சருமத்துல இப்படி இருக்கா? அப்ப அது இந்த புற்றுநோயின் அறிகுறி : உஷாரா இருங்க

பேசல் செல் கார்சினோமா என்பது தோலில் ஏற்படும் ஒருவகையான தோல் புற்றுநோய் ஆகும்.

பொதுவாக இந்த தோல் புற்றுநோய் நமது உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

தொடக்க நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த தோல் புற்றுநோய் மிக எளிதில் பரவாது.

தோலின் மேலடுக்கில் உள்ள செல்களில் ஏதாவது காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இந்த பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்படுகிறது.

இது தோலில் உள்ள பழைய செல்களை அழித்து புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. அவற்றைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.

பேசல் செல் கார்சினோமா எந்த பகுதியில் தோன்றும்?
பொதுவாக பேசல் செல் கார்சினோமா புற்றுநோய், கழுத்து அல்லது முகம் ஆகிய பகுதிகளில் காணப்படும். குறிப்பாக சூரியனின் கதிர்கள் படும் தோல் பகுதிகளில் வெள்ளை அல்லது அரக்கு நிறத்தில் மெழுகுக் கட்டியைப் போல் இது காணப்படும்.

தோலில் ஏற்பட்டிருக்கும் இந்த புற்றுநோயை மிக எளிதாகக் குணப்படுத்த முடியாது.

பேசல் செல் கார்சினோமா அறிகுறிகள்

  • தோலில் படர்ந்து இருக்கும் செதில்கள்
  • தோல் புண்கள்
  • தோலில் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள் அல்லது மஞ்சள் நிறத்திலான வடுக்கள்
  • தோல் அரிப்பு
  • தோலில் ஏற்படும் இரத்தப் போக்கு
  • வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உருவாகும் தோல் வீக்கம்
  • தோலில் ஏற்படும் காயங்கள்
  • தோல் திசுக்களில் ஏற்படும் வீக்கம் போன்றவை தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பேசல் செல் கார்சினோமாவிற்கான சிகிச்சைகள்
தோலில் பேசல் செல் கார்சினோமா புற்றுநோய் ஏற்பட்டால், அதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை என்னவென்றால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகும்.

ஏனெனில் பேசல் செல் கார்சினோமா தோல் முழுவதும் ஏற்கனவே பரவியிருக்கும்.

அதோடு தோலின் கீழடுக்கு வரை வேர்விட்டிருக்கும். ஒருசில நேரம் எலும்பு வரைகூட ஊடுருவி இருக்கும். எனவே அறுவை

சிகிச்சை செய்வதன் மூலம் பேசல் செல் கார்சினோமா புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.

சிலருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இந்த புற்றுநோய் மிகவும் மெதுவாக வளர்வதால் இதைக் குணப்படுத்துவதற்கான தகுந்த சிறந்த மருத்து சிகிச்சைகள் இன்னும் வளரவில்லை.

முடிவு
மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் தோல் புற்றுநோய் நிபுணர்களை சந்தித்து முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று, மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதோடு சூரியனின் புறஊதா கதிர்கள் தோலைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது பேசல் செல் கார்சினோமா தோல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.