எது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா? சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்!

நீண்ட, ஆரோக்கியமான, மற்றும் வலிமையான கூந்தலே ஒவ்வொரு பெண்ணின் கனவாகும்.

மக்கள் தங்களை அழகாக காட்ட எந்த தூரத்திற்கும் செல்ல தயாராக உள்ள காலம் இது. ஆரோக்கியமும், ஸ்டைலான தோற்றமும், கூந்தலை சீர்படுத்துவதில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்டது.

நம் கூந்தலை அழகாக்க இயற்கையான பொருள் ஒன்று உள்ளது. அதைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

சீயக்காய்

  • சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும்.
  • உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும்.
    அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
  • வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
  • இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.
  • கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி,நீண்டு நிலைக்கும்.
  • பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.

கெமிக்கல் வேண்டாம்
பொதுவாகவே தலை முடிக்கு அதிக அளவில் கெமிக்கல்களைப் பயன்படுத்தக்கூடாது.

இனி கெமிக்கல் அதிகம் நிறைந்த எந்த ஒரு பொருட்களையும் தலைக்கு தினமும் பயன்படுத்தாதீர்கள்.

இதனால் முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். சீயாக்காய் போன்ற இயற்கை பொருள் சொட்டை விழுந்த இடத்திலும் முடியை வளர செய்யும்.