நாம் செய்யும் இந்த தவறால் தான் பற்கள் இப்படி ஆகிறது; பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

நம் பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியாமக இருக்கும். பொதுவாக வாயின் ஆரோக்கியத்திற்காக நாம் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை பற்களைத் துலக்குவோம்.

அதுவும் காலை மற்றும் இரவு நேரத்தில் பற்களைத் துலக்குவோம். அப்படி பற்களைத் துலக்கும் போது நம்மில் பலர் ஒருசில தவறுகளை நம்மை அறியாமல் செய்கிறோம்.

இந்த தவறுகளால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு வாய் சம்பந்தமான பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். இதுப்போன்று பல தவறுகளை நாம் புரிந்து வருகிறறோம்.

இப்போது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளைக் காண்போம்.

பற்களில் உள்ள அழுக்கு போக வேண்டுமென்று, பலர் பற்களை அழுத்தி தேய்ப்பார்கள். ஆனால் அப்படி அழுத்தி தேய்க்கும் போது, பிரஸில் உள்ள மயிர்கால்கள் வளைந்து, பற்களில் சிக்கியுள்ள அழுக்குகள் சரியாக நீக்கப்படாமல் இருக்கும்.

அதனால், ஈறுகள் சேதமடையவும் வழிவகுக்கும். எனவே பற்களை எப்போதும் துலக்கும் போது, மென்மையாக தேய்ப்பதுடன், சரியான மென்மையான டூத் பிரஷ் மற்றும் டூத் பேஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

இனிப்பான பொருட்களை அதிகம் சாப்பிட்டால் பற்கள் சொத்தையாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இருந்தாலும், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நாம் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஃப்ளோரின் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

மேலும், எனவே ஈறுகளை வலுவாக்க, டூத் பிரஷ் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதோடு திட உணவுகளை நன்கு மென்று விழுங்க வேண்டும்.

அதோடு வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்குவது, உப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பது போன்ற செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பல் மருத்துவரை அணுகுங்கள் மற்றும் அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் பயன்படுத்துங்கள்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளானது உணவு மற்றும் எச்சிலில் இருந்து வரும் தாதுக்கள் பற்களைச் சுற்றி படிவதால் ஏற்படுவதாகும்.

இது பெரும்பாலும் பற்களின் பின் பகுதியில் தான் ஏற்படும். இந்த மாதிரியான மஞ்சள் கறைகளை டூத் பிரஷ் கொண்டு நீக்க முடியாது.

இந்த மஞ்சள் கறைகள் பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளில் அழற்சியை உண்டாக்குவதோடு, ஈறு நோயையும் உண்டாக்கும்.

முக்கியமாக இந்த மஞ்சள் கறைகள் கடினமாக இருப்பதால், பல் மருத்துவர்களால் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி மட்டுமே நீக்க முடியும்.

எனவே வருடத்திற்கு ஒருமுறையாவது பல் மருத்துவரை அணுகு உங்கள் பற்களை சுத்தம் செய்யுங்கள். இதனால் நீண்ட நாட்கள் பற்கள் நல்ல நிலையில் இருக்கும்.