சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.
இந்த சஞ்சாரம் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சனி பெயர்ச்சி பத்தாம் இடத்தில் கர்மசனியாக மேஷ ராசிக்காரர்களுக்கு உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும்.
தன யோகம் அதிகம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி வருவது நன்மையான பலன்களைத் தரும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி எப்பவுமே தீமை செய்ய மாட்டார். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள்.
அதிக முதலீடுகள் தவிர்க்கவும் அதே நேரத்தில் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைப்பதால் நிறைய தன லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்று பயப்பட வேண்டாம். பெரிய கெடுபலன்கள் வராது. பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார்.
செய்யும் தொழிலில் லாபம் வரும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு, சனி பார்வை கிடைப்பதால் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பாகவும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கேட்டு செய்யவும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் கண்டச்சனியால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் தொழில் பார்ட்னர் குடும்ப பார்ட்னரிடம் விட்டுக்கொடுத்து போகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை வரும் அப்புறம் சங்கடம்தான். கூட்டுத் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது.
இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய தொடங்கும் நேரம் வந்து விட்டது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நன்மைகளே நடைபெறும்.
பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் லாபம் கிடைக்கும். பூர்வீக தொழில்களை தொடர்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நல்ல பலன்களையே தருவார் வீடு நிலம் வாங்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும்.
சனி உங்கள் ராசிக்குள் உச்சமடைபவர். சனியின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சனிபகவான் தரும் தன பலன்களை அனுபவிக்க தயாராகுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது.
உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது இனி சிக்கல்கள் தீரும். காரணம் சனி மூன்றாம் வீட்டுக்கு மாறுவதால் தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும் வீடு நிலம் வாங்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் வியாபாரம், தொழிலில் இருப்பவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
காரணம் சனியின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். எதையும் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கூட்டுத்தொழிலில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி. சொந்த வீட்லயே அமரும் சனி யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார் என்றாலும் தொழில் ரீதியான மாற்றங்கள் மெதுவாக அமையும்.
கூடவே குருவும் சில காலம் அமர்ந்து சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பொருளாதாரம் அபரிமிதமாக வந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும்.
சிக்கமான இருந்தால் நன்றாக பணம் சேமிக்கலாம். வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தை தரும். புதிய முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கு லாப ஸ்தானதாதிபதி லாப ஸ்தானத்திலேயே வருவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு அதிகமாக சாதகமான சம்பவங்களை நடைபெறும்.
குருவும் லாபத்தில் இருக்கிறார். ராகு கேது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் பண வருமானமும் லாபமும் அபரிமிதமாக இருக்கும்.