சனிப்பெயர்ச்சியானது 2020 – 23 மக்களால் அதிகம் கவனிக்கப்படுவது சனிப் பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் ஒவ்வொரு ராசிகளும் எந்த வகையில் ஆதாயம் அல்லது பாதிப்பை சந்திக்க உள்ளது. யாருக்கு என்ன சனி நடக்க உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்..
மேஷம்
மேஷ ராசிக்கு 10ம் இடமான ஜீவன, கர்ம, தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். சனியின் அதிர்ஷ்ட பலன் அதிகமாகவும், பாதிப்பு குறைவாக பெறப்போகும் ராசி.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு 9ம் இடமாக அமைவதால் அஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் குருவாலும், சனி பகவானாலும் யோக பலன்களைப் பெறப் போகின்றார்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு 8ம் இடத்தில் சனி அமர்வதால் எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கடக ராசி
கடக ராசிக்கு 7 இடமான மனைவி, துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனியின் பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை தான் நடக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு 6ம் இடத்தில் சனி அமர்வதால் பெரிய பாதிப்பு இருக்காது. தாக்கங்கள் குறைவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு 5ம் இடத்தில் சனியின் சஞ்சரிக்கப்போவதால் அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் சகல விதத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு 4ம் இடத்தில் அமர்ந்து அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது என்பதால் தொழிலில் அலைச்சல் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை.
விருச்சி ராசி
விருச்சிக ராசிக்கு 3ம் இடத்திற்கு சனி நகர்வதால் விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுகிறது. எந்த முயற்சிக்கும் சிறப்பான கூடுதல் பலன் கிடைக்கும் என்பதால் முயற்சி செய்வதை இன்றே தொடங்குங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு 2ம் இடத்தில் சனி அமர்ந்து ஏழரை சனியின் இரண்டாம் பகுதியை அனுபவிப்பதால் உங்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத திருமணம் யோகம் உண்டு.
மகர ராசி
மகர ராசியில் சனியின் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனியின் உச்சத்தில் இருக்கிறீர்கள். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். அடுத்தவரைக் கண்காணிக்காமல் உங்கள் செயலில் நேர்த்தியாக செயல்பட தொடங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீன ராசி
மீன ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம். லாபம் உண்டாகும்.
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார்.