துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு செல்லும் சுக்கிரன்! பொன், பொருள், செல்வத்தை அடையப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று அதிகாலை 05.04 மணிக்கு நுழைகிறார்.

இந்தசுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது மற்றும் 7 ஆவது வீட்டின் ஆளும் கிரகமான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.

இந்த வீடு திடீர் செயல்பாடுகள் மற்றும் கெட்ட எண்ணங்களைக் குறிப்பதால், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த காலத்தில் உங்ல ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

சிலருக்கு நிதி நெருக்கடி ஏற்படலாம். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை அவரது குடும்பத்தை வீட்டிற்கு வரவேற்பார். இக்காலத்தில் உங்கள் அன்றாட பழக்கங்களைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.

சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இதனால் நீங்கள் அழுத்தமாக உணர்வீர்கள்.

சுக்கிரனின் இந்த காலத்தில், பணத்தை எங்கும் முதவீடு செய்யாதீர்கள். எவ்வாறாயினும், தொடர்ச்சியான முயற்சிகளால், பண லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவ்து வீட்டின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியால் 7 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். இந்த வீடு உங்களின் திருமண வாழ்க்கை மறறும் சமுகத்தில் உங்களின் தோற்றம் பற்றி கூறுகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் உடல் நலம் வலுப்பெறும். நீண்ட கால நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, இந்த பெணர்சசி உங்களுக்கு சாரகமானது என்பதை நிரூபிக்கும். வணிகத்தில் நன்மைகள் மற்றும் லாபங்களைக் காண்பீர்கள்.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் உறவில் காதல் வளரும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கும்.

இந்த காலத்தில் உங்கள் எதிரிகள் சிலர் உங்கள் துன்புறுத்துவதற்கும், தொல்லைகளை உருவாக்குவதற்கும் தீவிரமாக செயல்படுவார்கள். சமூகத்தில் உங்களின் ஆளுமையை மேம்படுத்த இது சிறந்த காலமாகும்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியால் போராட்டங்களையும், மோதல்களையும் குறிக்கும் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சியால் நீங்கள் நோய்வாய்ப்படலாம்.

உங்கள் செலவுகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பின் கட்டுப்படுத்த முடியாததாகிவிடும்.

எனவே நிதி விஷயத்தில் சற்று திட்டம் தீட்டி செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த பெயர்ச்சி மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் யாரையேனும் காதலித்தால், உங்களின் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 5 ஆவது வீட்டிற்கு செல்லவிருக்கிறார். இதனால் உங்களின் முடிவெடுக்கும் திறன், காதல் உறவு, குழந்தைகள் மற்றும் கலைத் திறன்களை மதிப்பீடு செய்வீர்கள்.

இந்த பெயர்ச்சியின் விளைவால், காதல் உறவு அழகாக மாறும் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். உங்களின் வருமானம் சீராக வளரும் மற்றும் உங்களின் நிதி நிலைமை முன்பை விட வலுவாகத் தொடங்கும்.

இது நிதி மற்றும் சமூக ரீதியாக பயனடைய உதவும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த காலம் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு உங்களின் மகிழ்ச்சி மற்றும் தாயைக் குறிக்கிறது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் தனது தாய், மகிழ்ச்சி, செழிப்பு, அசையும் மற்றும் அசையாச் சொத்து மற்றும் பலவற்றைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுகிறார்.

சுக்கிரன் 4 ஆவது வீட்டில் இருப்பதால், உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். மேலும் உங்கள் வீட்டைப் புதுப்பிக்க பணத்தை செலவிடுவீர்கள்.

குடும்பத்தில் சில வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருங்கள். பணியிடத்தில் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளால் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சிறந்ததாக்குவதில் நீங்கள் இறுதியில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் இது உங்களுக்குள் திருப்தியை அளிக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் தாயும் நல்ல பலன்களைப் பெறுவார் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பார். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் சமுதாயத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால், உங்கள் முயற்சிகள் விரைவுபடுத்தப்படும்.

மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய அனைத்தையும் அடைய நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் நிலுவையில் உள்ள பல பணிகள் அல்லது திட்டங்கள் முடிவுக்கு வரும். இது உங்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும். மேலும் இது உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும்.

உங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு முடிந்தவரை உதவுவீர்கள், தேவைப்பட்டால் அவர்களுக்கு நிதி உதவி செய்வீர்கள்.

இந்த நேரத்தில், நீங்கள் மிகவும் வலுவான நிலையில் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் அயலவர்கள் அல்லது உறவினர்களுடன் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடலாம், எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்
துலாம் ராசியின் இரண்டாவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீடு நிதி, திரட்டப்பட்ட செல்வம், உங்கள் குடும்பம், உங்கள் உணவுப் பழக்கம், உங்கள் முகம் மற்றும் குரல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சியால், செல்வத்தை பெறுவதற்கான உங்களின் ஆசை நிறைவேறும். மேலும் பல வருமான ஆதாரங்கள் உருவாகும்.

இது உங்கள் நிதி நிலைமையை சிறப்பாக வைத்திருக்கும். குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பதற்றம் மற்றும் வாதங்களைத் தீரும்.

உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் முழு கவனம் செலுத்துவீர்கள், மேலும் உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பீர்கள். இருப்பினும், சில சூழ்நிலைகளை சரிசெய்ய, நீங்கள் முரட்டுத்தனமாக அல்லது உணர்ச்சியற்ற முறையில் செயல்பட வேண்டியிருக்கும்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி ரீதியாக செல்வந்தர்களாக இருப்பீர்கள் என்பதால் கவலைப்பட தேவையில்லை. உங்கள் செல்வத்தை சேமித்து குவிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் வணிகத்தைப் பொறுத்தவரை மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றி மற்றும் நிதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், முதல் வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இதனால் உங்களுக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்களை சந்தோஷப்படுத்தும் புதிய பொருட்களை வாங்குவீர்கள். இந்த காலக்கட்டத்தில், புதிய கேஜெட்டுகளை வாங்கி, உங்களின் ஆளுமையை மேம்படுத்த முயற்சிப்பீர்கள்.

அழகுசாதனப் பொருட்களாக இருந்தாலும் சரி, சில துணிகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் நீங்களே வாங்க விரும்புவீர்கள். இது நிச்சயமாக உங்கள் செலவினங்களைச் அதிகரிக்கும்.

ஆனால் இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் உண்மையில் வருந்தமாட்டீர்கள்.

சுக்கிரனின் இந்த மாற்றம் திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும். காதல் வளரும். உங்கள் காதலியுடன் மறக்கமுடியாத நேரத்தை செலவிட உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வணிகம் வளர்ச்சியடையும்.

நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள், இது நிதி நிலைமை மேம்பட வழிவகுக்கும். உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இது உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள்.

ஏனெனில் அவர்கள் இக்காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்வார்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

இதனால் சிக்கலில் சிக்குவீர்கள். இக்காலத்தில் உங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவையானவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இல்லை.

ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுவீர்கள். எனவே உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், பதினொன்றாவது வீட்டில் இடம் பெயர்கிறார்.

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். உங்கள் இலட்சியங்களை நிறைவேற்ற அதிகம் ஊக்குவிக்கப்படுவீர்கள்.

சமுதாயத்தில் உங்கள் நற்பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும். மேலும் உங்கள் நிதி நிலை வலுவாக மாறும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் பிள்ளைகள் கல்வி வாழ்க்கையில் சாதகமான முடிவுகளை பெறுவார்கள்.

உங்கள் தேர்வுகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் மூத்தவர்களுடன் நல்லுறவைப் பேண நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஏனெனில் இந்த உறவு சரியான நேரத்தில் பலன்களைப் பெற உதவும்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், பத்தாவது வீட்டிற்கு செல்கிறார். இந்த வீடு தொழில் அல்லது வணிக வீடு என்று அழைக்கப்படுகிறது.

சுக்கிரன் பத்தாவது வீட்டிற்கு செல்வதால், அவரது நேரடி தாக்கம் உங்கள் தொழில் வாழ்க்கையில் காணப்படும். இதனால் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் எழும். அதிர்ஷ்டம் உங்களை முழுமையான ஆதரிக்கும்.

இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை வலுபெறும் மற்றும் பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.

அதே சமயம் எந்தவிதமான அலட்சியமும் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் இருக்கும். வணிக அடிப்படையில் நீங்கள் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் விளைவாக, உங்கள் வாழ்க்கையில் சில குறிப்பிடத்தக்க ஏற்ற தாழ்வுகளை நீங்கள் திடீரென்று காண்பீர்கள். அவற்றில் சில நல்லதும் கெட்டதும் ஆகும். மேலும் நீங்கள் சில பெரிய நிதி நன்மைகளைக் காணலாம்.

இது உங்கள் சில நிதி சவால்களை சமாளிக்க உதவும். இந்த நேரம் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா அல்லது பயணத்தை அனுபவிக்க வைக்கும்.

இதன் மூலம், நீங்கள் அதிக அளவு பணத்தை செலவிடுவீர்கள், ஆனால் மகிழ்ச்சியை அடைவீர்கள், மேலும் மிகவும் அனுபவிப்பீர்கள்.

இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட முயற்சிகளிலிருந்து நீங்கள் அசாதாரண வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.