தொட்டது எல்லாம் வெற்றியில் முடியும் மகர ராசியின்.. சனிப்பெயர்ச்சி பலன்கள்

மனம் போல் வாழ விரும்பும் மகர ராசி அன்பர்கள் இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக பெயர்ச்சி அடைகிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

மனதிற்கு விரும்பிய வாகனங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு :

கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தங்களது கீழ்நிலை பணியாளர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். பெரிய அளவில் முதலீடு செய்யும்போது மற்றவர்களின் ஆலோசனைகளை காட்டிலும் சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு சற்று தள்ளிப்போகும். புதிய அதிகாரியின் அறிமுகம் சாதகமான சூழலை உருவாக்கும். மற்றவர்களுக்கான கடன் உதவிகளுக்கு முன்ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு :

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் தங்களது கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகப்படுத்தவும். பெற்றோர்களின் அரவணைப்பு உங்களின் முன்னேற்றத்திற்கு பக்கப்பலமாக இருக்கும்.

பெண்களுக்கு :

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடனிருப்பவர்களின் உண்மையான முகத்தை தற்போது காண்பீர்கள். திருமண யோகம் அமையும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்கள் நன்மதிப்பை தரும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.